15069 வள்ளுவரைக் கேளுங்கள். கா.பொ.இரத்தினம்.

சென்னை 600090: தமிழ்மறைப் பதிப்பகம், எச். 12/9 கலாச்சேத்திரக் குடியிருப்பு, பெசன் நகர், 1வது பதிப்பு, ஆடி 1992. (சென்னை 600086: சாலை அச்சகம், 11, திரு வீதியான் தெரு, கோபாலபுரம்).

319 பக்கம், விலை: இந்திய ரூபா 35.00, அளவு: 19.5×13.5 சமீ.

உலகத் தமிழ்மறைக் கழகத்தின் 25ஆவது திருக்குறள் மாநாடான உலகத் திருக்குறள் மாநாட்டு வெளியீடு. நூலாசிரியர், திருக்குறள் செல்வர், தமிழ்ச் சான்றோர், பேராசிரியர், முனைவர் கா.பொ. இரத்தினம் அவர்கள் இலங்கைப் பாராளுமன்றத்தின் முன்னைநாள் உறுப்பினராவார். வள்ளுவரைக் கேளுங்கள் என்ற இந்நூல் கேள்வியும் பதிலுமாக அமைந்துள்ளது. நமக்கு ஏற்படும் ஐயங்களுக்கு விளக்கம் பெறும் வகையில் வள்ளுவரைக் கேட்டால் அவர் என்ன பதில் சொல்லியிருப்பார் என்று எதிர்பார்க்கின்றோமோ அந்த மறுமொழியை இன்றைய மொழிநடையில் நூலாசிரியர் நமக்கு இந்நூல்வழியாக வழங்குகின்றார். மறுமொழிக்குரிய திருக்குறளையும் ஆங்காங்கே தேடி எடுத்துக் கொடுத்திருக்கிறார். அந்தக் குறளில் காணப்படும் அருஞ்சொற்களுக்குத் தேவையான வகையில் பொருளும் தந்துள்ளார்.

ஏனைய பதிவுகள்