ஆறுமுக நாவலர். கொழும்பு 4: இந்துப் பண்பாட்டு நிதியம், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, 2018. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).
vi, 18 பக்கம், விலை: ரூபா 40.00, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-9233-88-6.
அறம் பற்றிக் கூறுவனவே நீதி நூல்கள். வடமொழியில் இருக்கு வேத காலத்திலிருந்தே நீதிக் கருத்துகள் இலக்கியங்கள் ஊடாகக் காலத்திற்குக் காலம் எழுந்துள்ளன. அறம் பற்றிய கவிதையின் தொடக்கத்தை வேத இலக்கியங்களுக்குப் பின் இதிகாசங்களிற் காண முடிந்தது. அவையெல்லாம் சமூகத்தை நல்வழிப்படுத்தும் நல் வழிகாட்டிகளாக அமைந்தன. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பெருமான் அவர்களால் எழுதிப் பதிப்பித்து வெளியிடப்பட்ட பாலபாடம் முதலாம், இரண்டாம் புத்தகங்களிலே இரண்டாம் பாலபாடத்திலிருந்து ‘அக நீதி வாக்கியம்” என்று சிறப்பாக எழுதப்பட்ட எண்பத்திரண்டு நீதி வாக்கியங்களும் உள்ளடங்கிய நூலின் தொகுப்பே இந்நூலாகும்.