நா.ஞானகுமாரன். யாழ்ப்பாணம்: தூண்டி இலக்கிய வட்டம், 141, கேணியடி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, 2020. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39ஃ2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).
xii, 188 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-1441-01-2.
இந்தியச் சிந்தனை மரபில் சைவம், வைணவம், பௌத்தம், சமணம் போன்ற அனைத்துத் தத்துவங்களிலும் மனம் தொடர்பான எண்ணக்கரு முக்கியத்துவம் பெற்று விளங்கியுள்ளது. இதன் மேன்மையை உணர்த்தும் வகையில் இந்நூல் படைக்கப்பட்டுள்ளது. மேலைத்தேய உளவியல்-அறிமுகம், இந்திய உளவியல், ஆன்ம தத்துவம், மனமும் உளவியலும், அந்தக்கரணமும் அகச் செயற்பாடுகளும், அறிவும் உளவியலும், புத்தி தத்துவம், யோகமும் உளவியலும், உணர்வும் உளவியலும், உளவியல் நோக்கில் முக்தி ஆகிய 10 இயல்களாக வகுக்கப்பட்டு, இந்தியச் சிந்தனை மரபில் உளவியலானது எவ்வகையில் எடுத்தாளப்பட்டுள்து என்பதை வெளிப்படுத்துவதாக அமைகின்றது. முதல் அத்தியாயமானது மேலைத்தேய உளவியல் போக்கினை அறிமுகப்படுத்துவதாக அமைந்ததுடன் அடுத்துவரும் அத்தியாயங்கள் இந்தியத் தரிசனங்கள் பலவற்றினை அடிப்படையாகக் கொண்டு விளக்கி நிற்கின்றன. இங்கு வேதாந்தம், சாங்கியம், யோகம், சைவசித்தாந்தம், பௌத்தம் போன்ற பல தரிசனங்களின் கருத்தியல்கள் எடுத்தாராயப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.பேராசிரியர் நா.ஞானகுமாரன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல்துறையில் கடந்த 42 ஆண்டுகளாக கடமையாற்றி வருபவர்.