15074 இந்து நாகரிகம்: க.பொ.த. (உயர்தர) பாட வழிகாட்டி நூல்.

த.மனோகரன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 2: அகில இலங்கை இந்த மாமன்றம், 91/5, சேர் சிற்றம்பலம் ஏ கார்டினர் மாவத்தை, 1வது பதிப்பு, 2007. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48 B, புளுமெண்டால் வீதி).

xii, 391 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 23×15 சமீ.

க.பொ.த. உயர்தர வகுப்பில் இந்து நாகரிகத்தை ஒரு பாடமாகக் கற்கும் மாணவர்களுக்கு பயன்தரும் வகையில் ‘இந்து ஒளி” இதழ்களில் வெளிவந்த இந்து நாகரிகம் சார்ந்த 68 கட்டுரைகளைத் தொகுத்து இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. சிந்துவெளி தொல்பொருள் ஆய்வுகள், சிந்துவெளி நாகரிகம், வேதகால நாகரிகம், வேதங்களும் ஆகமங்களும், சைவாகமம், வேதாகம விளங்கங்களாக திருமுறைகள், குப்தர் கால இந்துமத மறுமலர்ச்சி, இதிகாச புராணங்கள், மகா புராணங்கள் பிரதிபலிக்கும் சமயப் பண்பாட்டு மரபுகள், தர்மசாஸ்திரங்களின் முக்கியத்துவம், பகவத் கீதை ஒரு நடைமுறை வாழ்க்கைத் தத்துவம், பல்லவர் கால பக்தி இலக்கியம், சோழப்பேரரசில் சைவசமய வளர்ச்சி, விஜயநகர நாயக்கர் கால இந்து சமய வளர்ச்சி, வைணவ மதத்தின் தோற்றமும் வளர்ச்சியும், சாக்த மதத்தின் தோற்றமும் வளர்ச்சியும், காணபத்திய நெறியின் தோற்றமும் வளர்ச்சியும், இந்து சமயத்தில் சூரிய வழிபாடு, ஆச்சிரமக் கோட்பாடு, குருகுலக் கல்வி என இன்னோரன்ன தலைப்புகளில் விடயங்கள் கட்டுரை உருவில் தரப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Better British Casino Software 2024

Articles Free Revolves To have Established People Fundamental Extra Totally free Spins Limits On the Earnings And Withdrawals step 1 No-deposit Added bonus As the