த.மனோகரன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 2: அகில இலங்கை இந்த மாமன்றம், 91/5, சேர் சிற்றம்பலம் ஏ கார்டினர் மாவத்தை, 2வது பதிப்பு, 2014, 1வது பதிப்பு, 2007. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48 B, புளுமெண்டால் வீதி).
xii, 464 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 22×14.5 சமீ.
2007இல் வெளிவந்த முதற் பதிப்பில் 68 கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன. இப்புதிய பதிப்பில் மேலதிகமாக இந்து அரசியல் கோட்பாடுகள், ஈழத்து புராதன சிவன் கோவில்களும் இந்து சமயக் கோட்பாடுகளும், காசிவாசி செந்திநாதையர், ஞானப்பிரகாச முனிவர், அருணகிரிநாதரும் முருக வழிபாடும், தாயுமான சுவாமிகளும் சமரச சன்மார்க்கமும், சிவப்பிரகாச சுவாமிகளும் வீரசைவமும், மத்துவரும் துவைதமும், இந்து அறவியலும் சமண பௌத்தமும், புருடார்த்தங்கள், அரசியல் கோட்பாடுகள், பொருளியல் கோட்பாடுகள், ஆச்சிரம தர்மங்கள், தமிழில் நீதி நூல்கள், உலகளாவிய ரீதியில் நிலைபெற்றுள்ள இந்து சமயம், தென்கிழக்காசிய நாடுகளில் இந்து மதம் பெற்றிருந்த செல்வாக்கு ஆகிய கட்டுரைகளும் இணைக்கப்பட்டு மொத்தம் 84 ஆக்கங்கள் காணப்படுகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 57750).