15077 சிவத்திரு வடிவங்கள்: உண்ணிலைத் தத்துவங்கள்.

வி.சங்கரப்பிள்ளை. கொழும்பு: சிவத்திரு மன்ற வெளியீடு, 1வது பதிப்பு, 2002. (கல்கிஸ்சை: டெக்னோ பிரின்டர்ஸ், 7, 15A, பிந்தாலியா வீதி, மவுண்ட் லவீனியா).  

xxi, 45 பக்கம், சித்திரங்கள், விலை: விலை: ரூபா 75.00, அளவு: 21×14.5 சமீ.

சைவசித்தாந்த ஆசிரியர், பன்னாலைப் பண்டிதர் வி.சங்கரப்பிள்ளை அவர்களால் ஆக்கப்பெற்றுள்ள இந்நூல், அருவம், உருவம், அருவுருவம் பற்றிய விரிவான சித்தாந்தக் கருத்துக்களை விளக்கியும், நடராஜ மூர்த்தி பற்றிய சித்தாந்த விளக்கத்தையும் அரிய வேறு பல தத்துவ விளக்கங்களையும் உள்ளடக்கியதாய், ஓர் அளவு சித்தாந்த அறிவுள்ள எவராலும் விளங்கக் கூடியதாகவும் சுருக்கமாகவும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பதியுண்மை, சிவத்தின் சிறப்பிலக்கணம், தடத்த வடிவங்கள்-அரு, உரு, அருவுரு, நவந்தருபேதம், சக்திபேதம், அருவுருவத் திருமேனி-சாதாக்கியம், உருவத் திருமேனி, மகேசுவர வடிவங்கள், சிவகுமாரர், அத்துவா வடிவு, மந்திர வடிவு, அட்டமூர்த்த வடிவம், அநந்ததேவர், நூற்றுப் பதினெட்டு உருத்திரர், சிறீ கண்ட உருத்திரர்- சிறீ கண்ட பரமசிவன், ஐந்தொழில் -பஞ்ச கிருத்தியம், திருமேனி அங்க பேதங்கள், திருவேடம் -சிவனுரு சிவத்திரு வடிவம், உண்ணிலைத் தத்துவங்கள் 36, தத்துவ வியாபகம், முதல்வன் மூவகைத் திருமேனிகள் கொண்டிருந்து அனுக்கிரககிக்குங் கிருத்தியங்கள், பிரதமமகா சங்கார நிருத்தம், சம்புபட்சம் அணுபட்சம் ஆகிய 23 பாடங்களை விளக்குவதாக உள்ளது.

ஏனைய பதிவுகள்

Deneme Bonusları Nasıl Alınır? Adım Adım Rehber

Yatırım şartsız deneme bonusları, oyunculara risksiz bir şekilde oyun deneyimi sunarak siteyi keşfetmelerine yardımcı olur. Slot siteleri, oyuncuların heyecanlı vakit geçirmelerini sağlamak için cazip temalar