15079 மாயை பற்றிய தத்துவக் கதைகள்.

கே.வி.குணசேகரம். கோப்பாய்: கே.வி.குணசேகரம், பிள்ளையார் கோயிலடி, கோப்பாய் மத்தி, 1வது பதிப்பு, 2010. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

vii, 76 பக்கம், விலை: ரூபா 200.00, அளவு: 22×15 சமீ., ISBN: 955-0134-73-3.

சைவ சித்தாந்தம் உலகப் பொருட்கள் அனைத்தையும் பதி (இறை), பசு(உயிர்), பாசம் (தளை) எனும் மூன்று பொருள்களில் அமைத்துக்கொள்கின்றது. இவை யாவும் நித்தியமானவை. அவற்றில் பாசமானது ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்களைக் கொண்டது. இம்மும்மலங்களில் ஒன்றாகிய மாயை சைவசித்தாந்த தத்துவத்தில் சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கிறது. மாயையானது உலகத்தின் தோற்றம், இருப்பு, அழிவு ஆகிய மூன்று நிலைகளின் அடிப்படையாக விளங்குகின்றது. இவ்வாறு உலகமாகிய காரியத்திற்கு “மாயை” முதற்காரணமாக அமைவதுடன் மூலமாகிய ஆணவத்துடன் சேர்ந்தும், கன்ம மலத்தின் துணையோடும் செயலாற்றுகிறது என்கிறது சைவசித்தாந்தம். இத்தகைய சிறப்புக் கொண்ட மாயையைப் பற்றி எளிமையாகவும் அனைவரும் விளங்கிக்கொள்ளக் கூடிய வகையிலும் “மாயை பற்றிய தத்துவக் கதைகள்” என்ற இந்நூலை நூலாசிரியர் எழுதியிருக்கிறார்.

ஏனைய பதிவுகள்