15085 இந்து பௌத்த மத ஒற்றுமை வேற்றுமை ஆய்வு.

த.கனகரத்தினம். சென்னை 98: நியு செஞ்சுரி புக் ஹவுஸ், 41B, சிட்கோ இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், 1வது பதிப்பு, டிசம்பர் 2015. (சென்னை: பாவை பிரின்டர்ஸ்).

viii, 72 பக்கம், விலை: ரூபா 225., இந்திய ரூபா 60.00, அளவு: 22×15 சமீ., ISBN: 978-81-2342-771-3.

புத்தரின் தம்மபதத்திற்கும் திருக்குறள், நாலடியார் போன்ற நீதி நூல்களுக்கும் இடையில் பல ஒற்றுமைகளைக் கண்டு நயக்கலாம். இவை அறநெறியை உணர்ந்து அறவழியில் வாழ்வை நடத்தவும், நாட்டில் சாந்தி, சமாதானம் தழைக்க வழிசெய்யவும் உதவும். மதங்களும், இலக்கியங்களும் காட்டும் சில வேற்றுமைகளை பொருட்படுத்தாது குணம் நாடி ஒற்றுமைகளைக் கண்டு அதன்வழி நடப்பதற்கான வாயிலை இந்நூல் சுட்டி நிற்கின்றது. இந்து-பௌத்த உறவுகள்/ புத்த மதத்தில் இந்து தத்துவங்கள்/ பௌத்த வழிபாட்டில் கடவுளர்/ ஆன்மா, மறுபிறப்பு, கன்மம் என்பன பற்றி பௌத்த சைவ மத சிந்தனைகள்/ மறுபிறப்பு, கன்மம், ஆன்மா பற்றி இந்து, பௌத்த மதக் கொள்கைகள், தத்துவங்கள்/ தியானமும் பௌத்த மத பாவனாவும்/ தியானம்-பௌத்த முறைகளும் பயன்களும்/ மனம் என்பதன் பரம இரகசியம்/ ஜாதகக் கதைகள்ஃ பௌத்த வழிபாட்டில் போதி மரம்/  இலங்கையில் கண்ணகி-பத்தினி தெய்யோ வழிபாடுஃ புத்தர் பகவான் காட்டிய வழியில் சாந்தி சமாதானம் தழைத்திடுமா? ஆகிய பன்னிரண்டு கட்டுரைகளின் வழியாக இந்து பௌத்த மத ஒற்றுமை வேற்றுமைகள் அதன் நுட்பங்கள் என்பவற்றை இந்நூல் ஆராய்கின்றது.

ஏனைய பதிவுகள்

Mega Jack 81 od Wazdan Zagraj za darmo bez Rejestracji

Darmowe automaty do komputerów istnieją wspaniałe dla żółtodzióbów, którzy potrzebują zdobyć doświadczenie poprzednio rozpoczęciem gry w oryginalne kapitał. Na początek należałoby komunikować wyrażeń parę o