15088 வெசக் சிரிசர 2009.

நெவில் பியதிகம (பதிப்பாசிரியர்), த.கனகரத்தினம் (உதவிப் பதிப்பாசிரியர்). கொழும்பு 7: வெசாக் சிரிசர வெளியீட்டுக் குழு, அரச சேவைகள்; பௌத்த சங்கம், 90/15, வீரவ பிளேஸ், றாகம வீதி, கடவத்தை, 1வது பதிப்பு, மே 2009. (கொழும்பு-01: ANCL, Commercial Printing Department).

iv, 115, (2), 10, iv, 74  பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

இலங்கையின் வெசாக் தினத்தை முன்னிட்டு 74ஆம் ஆண்டாக அரசாங்க சேவைகள் பௌத்த சங்கத்தின் பிரசுரக் கமிட்டியால் வெளியிடப்படும் மும்மொழி மூல ஆண்டு மலர். இதில் தமிழ்ப் படைப்பாக்கங்களாக வாழ்த்துச் செய்தி (அதி மேதகு சனாதிபதி)யும், தியானமும் பௌத்த மத பாவனாவும் (த.கனகரத்தினம்), பகவானின் பாதைதனைப் பற்றி வாழ்வோம் – கவிதை (ஏ.ஜின்னாஹ் ஷரிபுத்தீன்), யானை என்ன மாதிரியானது? (ருவன் பண்டார அதிகாரி), சாந்தி சமாதானம் தழைத்திடுமா?-கவிதை (த.கனகரத்தினம்) ஆகிய நான்கு படைப்பாக்கங்களும்;; இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 346518).

ஏனைய பதிவுகள்

Can Have fun with Video game Regulations

Articles Percentage possibilities, detachment limitations and you can winnings limitations – test mr bet canada Review of SPADES People who such most informal or extremely

17290 கொழும்புத் தமிழ்ச் சங்கம்: தமிழ்ப் பட்டயக் கற்கை நெறி பட்டமளிப்பு விழாச் சிறப்பிதழ் (2014-2015).

கொழும்புத் தமிழ்ச் சங்க கல்விக்குழு. கொழும்பு 6: சங்கப் பணிமனை, கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, சங்கம் ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2015. (அச்சக விபரம் தரப்படவில்லை). 18 பக்கம், விலை: