15097 பிரபஞ்சத்தில் மணி.

திருச்செல்வம் தவரத்தினம். காரைநகர்: திருச்செல்வம் தவரத்தினம், சர்வசக்தி வெளியீடு, சடையாளி, 1வது பதிப்பு, டிசம்பர் 2019. (யாழ்ப்பாணம்: அன்றா பிறிண்டேர்ஸ், இல. 356A, கஸ்தூரியார் வீதி). 

x, 50 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 230., அளவு: 20×14 சமீ., ISBN: 978-624-95967-0-2.

மணியின் சிறப்பு, இந்துக் கோயில்களில் மணி, கோயில் மணிகள் ஆக்கப்படும் உலோகங்களும் முறைகளும், மணி என்ற சொல்லின் சிறப்பு, மணி ஒரு செய்தி அறிவிக்கும் கருவி, மணியும் உலோக இசைக் கருவிகளும், மணி ஓசையில் இறைவன், மணிஓசையின் ஈர்க்கும் ஆற்றல், மணி ரூபத்தில் ஐயப்பன், முருகன் திருக்கரத்தில் மணி, சைவ வாழ்வியலில் மணி ஓசை, உலகில் மணியின் சிறப்பு, கிறிஸ்தவ சமயத்தில் மணி, புத்த சமயத்தில் மணி, சோதிட பரிகாரத்தில் மணி ஆகிய 15 தலைப்புகளின் கீழ் மணி பற்றிய பல்வேறு தகவல்களை சேகரித்து தொகுத்து சுவையான மொழி நடையில் வழங்கியிருக்கிறார். நூலாசிரியர் ஆன்மீகம், சோதிடம், இலக்கியம் எனப் பல்துறை ஆக்கங்களையும் அவ்வப்போது எழுதி வருபவர்.

ஏனைய பதிவுகள்