15098 மாதங்களில் நான் மார்கழி.

எஸ்.கதிரவேலு. கொழும்பு: ஈழத்து ஆழ்வார் மயில்வாகனம் சுவாமி அடியார்கள், சிவகாமி அம்மாள் வெளியீடு, 1வது பதிப்பு, டிசம்பர் 1999. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48 B, புளுமெண்டால் வீதி).

24 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23×15  சமீ.

மார்கழி மாதத்தின் சமயச் சிறப்பினை இந்நூல் வழியாக ஆசிரியர் பதிவுசெய்துள்ளார். கடும் குளிரிலும் கொட்டும் மழையிலும் காலை எழுந்து உடல் சிலிர்த்து நிற்கின்ற வேளையில், கண்ணனை நினைத்து குளிர்ந்த நீரில் நீராடி கோயில் எய்தி அவன் புகழ்பாடி நோன்பிருப்பதை மார்கழி நோன்பு என்கிறோம். மார்கழி மாதம் வைணவத்திற்கு மட்டுமல்லாது சைவ சமயத்தவர்க்கும் சிறப்பான மாதம். சிவப்பரம் பொருளாகிய சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கண்டு மாணிக்கவாசகர் அருளிச்செய்த திருவெம்பாவை பாடி பாவை நோன்பு இருந்து திருவாதிரை தினத்தன்று தீர்த்தமாடி சித்தம் களி கொள்வார்கள். ஆண்டாள் பாடிய திருப்பாவை பாடி முப்பது நாட்களிலும் நோன்பு இருந்து பரந்தாமன் புகழ் பாடி தீமை நீங்கி மார்கழியின் நன்மைகள் பெறுமாறு ஆசிரியர் எம்மை இந்நூல் வழியாக வரவேற்கிறார்.

ஏனைய பதிவுகள்

Revenge Of the Titanic

Articles Enjoy Titanic Totally free Slot Video game Titanic Video slot By Bally Technologies Related Game Online game Info Farm Puzzle Is there A great