15099 யாழ்ப்பாணத்தில் வீரசைவம்: வரலாறும் பண்பாடும்.

சி.ரமணராஜா. யாழ்ப்பாணம்: இந்து நாகரிகத்துறை, இந்துக் கற்கைகள் பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 2020. (யாழ்ப்பாணம்: மிக்கி பிரின்டிங் ஸ்பெஷலிஸ்ட், பலாலி வீதி, திருநெல்வேலி).

xxviii, 298 பக்கம், விலை: ரூபா 900., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-44529-4-7.

இந்நூல் வரலாறு, சமயம், தத்ததுவம், சமூகம், பொருளாதாரம், சமூகப் படிநிலை, அரசியல் மற்றும் கலையியல் சமகாலப் போக்கு என பண்பாட்டின் அத்தனை கூறுகளின் வழியேயும் யாழ்ப்பாணத்தில் வீரசைவத்தின் வரலாற்றையும் பண்பாட்டையும் ஆராய்ந்து உரைக்கும் வழியில் முதன்மை நூலாக அமைந்துள்ளது. நூலாசிரியர் திரு. சி.ரமணராஜா அவர்கள் இந்து நாகரிகப் புலத்தில் கற்றல், கற்பித்தல், களப்பணி ஆய்வு எனப் பல்பரிமாணங்களில் தனது ஆளுமையினை ஆழ அகலப் பதித்தவர். நூன்முகம்: வரலாறும் பண்பாடும், வீரசைவப் பண்பாட்டு வரலாறும் அடிப்படைகளும், ஈழத்தின் வீரசைவ பண்பாட்டுப் படிமலர்ச்சியும் பரவலும், யாழ்ப்பாணத்தில் வீரசைவ சமயப் பண்பாடு, யாழ்ப்பாணத்தில் வீரசைவ சமூகப் பண்பாடு ஆகிய ஐந்து இயல்களில் இந்நூலை எழுதியுள்ளார்.

மேலும் பார்க்க: இந்து பௌத்த மத ஒற்றுமை வேற்றுமை ஆய்வு. 15085

ஏனைய பதிவுகள்