15102 சைவ போதினி: ஆறாம் ஏழாம் வகுப்புகள்.

விவேகானந்த சபை. கொழும்பு 7: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 98, வோட் பிளேஸ், 1வது மீள்பதிப்பு, மார்ச் 1999. (கொழும்பு 8: அரசாங்க அச்சகத்திணைக்களம், 118, பேஸ்லைன் வீதி).

xvi, 211 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ.

சைவபோதினியின் மூலப்பதிப்பு, கொழும்பு விவேகானந்த சபையாரால் 1976 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. தற்கால அறநெறிப் பாடசாலைகளின் மாணவர்களின் பயன்கருதி ஆறாம் ஏழாம் வகுப்புகளும் இணைந்ததாக 91 பாடங்களுடன் அறநெறிப் பாடசாலைகளுக்கான இலவச வெளியீடு இல. 8ஆக இந்நூல் இணைந்த பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. எமது சமயம், பொது அறிவு, திருக்குறள், கதைகள், அருட்பாடல்கள் ஆகிய பிரதான பாடப் பகுப்புகளுக்குள் இப்பாடங்கள் ஒழுங்குபடத்தித் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 29062).

ஏனைய பதிவுகள்

16692 பிள்ளை கடத்தல்காரன்.

அ.முத்துலிங்கம். நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வதுபதிப்பு, ஜீலை 2015. (சென்னை 600 077: மணி ஓப்செட்). 190 பக்கம், விலை: இந்திய ரூபா 195., அளவு: 22.5×15 சமீ., ISBN: