15103 புதிய சைவ வினாவிடை 2ஆம் புத்தகம்.

வி.கந்தவனம். கனடா: ஒன்ராரியோ இந்து சமயப் பேரவை, 1வது பதிப்பு, ஆவணி 2001. (கனடா: விவேகா அச்சகம், 60, Barbados Blvd, #6, Scarborough).

(2), viii, 62 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22.5×14.5 சமீ.

ஆறுமுக நாவலரின் சைவ வினா-விடை முதலாம் புத்தகத்தைத் தழுவி வெளிநாட்டு வாழ்க்கை முறைக்குப் பொருந்தும் வகையிற் பல மாற்றங்களைச் செய்து புதிய சைவ வினாவிடை முதற் புத்தகத்தை 1996இல் எழுதி 1997இல் கனடாவில், ஒன்ராறியோ இந்து சமயப் பேரவையினர் நூலாக வெளியிட்டனர். அதன் தொடர்ச்சியாக இந்த இரண்டாம் புத்தகமும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்புத்தகம் சைவ சமயத்தின் முப்பொருள் உண்மைகளையும் சமய நெறியில் நிற்கும் முறைகளையும், சைவத்தை வளர்த்த குரவர்களின் பணிகளையும் விளக்குகின்றது. மூன்று பிரிவுகளாக அவை வகுக்கப்பட்டுள்ளன. வினா-விடை பகுதியில் பதியியல், பசுவியல், பாசவியல், வேதாகமவியல், தமிழ் வேதவியல், சைவரியல், வீட்டு நெறியியல், பூசனையியல், சிவாலய வழிபாட்டியல், குரு சங்கம வழிபாட்டியல், விரதவியல், திருத்தொண்டரியல் ஆகிய 12 பாடங்கள் இடம்பெற்றுள்ளன. இரண்டாம் பிரிவில் மனப்பாடத்துக்குரிய திருமுறைத் தோத்திரங்களும், மூன்றாம் பிரிவில் திருமுறையில் அடங்காத பிற திருப்பாடல்களும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Nye Casinoer 2023

Content Bitspin Casino Altså Du Bør Analyse En Casino Av Listen Vår Spørsmål Med Javel Hvis Bred Casino Hvilke Betalingsmetoder Kan Ego Benytte Innen Nye