15111 திருப்படைக் கோயில்கள் மீதான பிரபந்தங்கள்.

வ.குணபாலசிங்கம், நா.வாமன் (பதிப்பாசிரியர்கள்). கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2018. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, ரட்ணஜோதி சரவணமுத்து மாவத்தை).

xiii, 483 பக்கம், விலை: ரூபா 1000.00, அளவு: 22.5×15 சமீ., ISBN: 978-955-9233-76-3.

கிழக்கிலங்கையில் உள்ள பழமை வாய்ந்த முருகனாலயங்கள் “திருப்படைக் கோயில்கள்” என அழைக்கப்படுகின்றன. “மட்டக்களப்பில் பழமையும் பிரசித்தமும் உடையனவான முருகன் கோயில்களைத் திருப்படைக் கோயில்கள் என்று கூறுவர். பண்டைய அரசர்களின் மதிப்பும், மானியமும், சீர்வரிசைகளும் பெற்ற கோயில்களே திருப்படைக் கோயில்களாகும்” என வி. சி. கந்தையா தனது மட்டக்களப்புத் தமிழகம் எனும் நூலில் குறிப்பிடுகின்றார். இந்நூலில் அத்தகைய திருப்படைக் கேயில்கள் மீது பாடப்பெற்ற முப்பது பிரபந்தங்களைத் தேடித் தொகுத்துப் பதிவுசெய்திருக்கிறார்கள். வெருகல் சித்திரவேலாயுதர் காதல் (வீரக்கோன் முதலியார்), வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி பதிகம் (தா.முருகேச பண்டிதர்), வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி திருவூஞ்சல் (தா.முருகேச பண்டிதர்), வெருகல் சித்திரவேலாயுத சுவாமி பேரில் சிறைவிடு பதிகம் (வே.அகிலேசபிள்ளை), வெருகலம்பதிப் பதிகம் (மு.சோமசுந்தரம்பிள்ளை), வெருகலம்பதிப் போற்றிப் பத்து (மு.சோமசுந்தரம்பிள்ளை), சித்தாண்டித் திருத்தல புராணம் (நா.அழகேச முதலியார்), அருள்மிகு சிற்றாண்டிவேலவர் ஊஞ்சல் (ஆசிரியர் அறியப்படவில்லை), சித்தாண்டிக் கீர்த்தனை (பி.சிவலிங்கம்), சித்தாண்டி முருகன் அந்தாதி (சிகண்டிதாசன்), மண்டூர் முத்துக்குமார சுவாமி பதிகம் (உடப்பிட்டிச் சிவசம்புப் புலவர்), தில்லை மண்டூர்ப் பதிகம் (ஏ.பெரியதம்பிப் பிள்ளை), மண்டூர் முருகன் பதிகம்  (க.பரராஜசிங்கம்), தில்லை மண்டூர் அந்தாதி (மு.சோமசுந்தரம்பிள்ளை), மண்டூர் முருகன் பக்திரசப் பாமாலை (கோ.நாராயணபிள்ளை), மண்டூர்ப் பிள்ளைத் தமிழ் (வி.விஸ்வலிங்கம்), மண்டூர்க் கந்தசுவாமி பதிகம் (பூ.சின்னையா), திருமண்டூர் முருக மாலை (மு.சோமசுந்தரம்பிள்ளை), மண்டூர் முருகன் மாலை (ப.வீரசிங்கம்), மண்டூர் கந்தன் பாமாலை (மண்டூர் தேசிகன்), மண்டூர் முருகன் திருவிருத்தமாலை (சி.தில்லைநாதன்), மண்டூர் முத்துக்குமாரசுவாமி இரட்டைமணி மாலை (உடுப்பிட்டி சிவசம்புப் புலவர்), திரு மண்டூர் முருகன் திருப்பவளமணிமாலை (நா.விநாயகமூர்த்தி), மண்டூர் வடிவேலர் தோத்திர மாலை (ஏ.கந்தையா), மண்டூர் வடிவேல் முருகன் பாமாலை (சி.சிவலிங்கம்), மண்டூர் முருகன் பாமாலை (விஜயலட்சுமி யோகேஸ்வரநாதன்), திருக்கோயில் திருப்பதிகம் (சி.பொ.த.வில்லியம்பிள்ளை), திருக்கோயிற் பதிகம் (க.பரராஜசிங்கம்), சித்திரவேலாயுத சுவாமி பேரில் போற்றிப் பதிகமாலை (நா.விநாயகமூர்த்தி), திருக்கோயில் சித்திரவேலாயுதர் திருத்தல புராணம் (க.லோகநாதக்; குருக்கள்) ஆகிய பிரபந்தங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

மேலும் பார்க்க:

செல்வச் சந்நிதி முருகன் கலைத்தேர்: 15373

யாழ்ப்பாணக் கோயில் ஓவியங்கள் 15380

யாழ். வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் ஆலய கூரை ஓவியங்கள் 15379

ஏனைய பதிவுகள்

Sizzling Hot Kostenlos Spielen

Content Buffalo Blitz Slot Review – Unser Fazit Zum Book Of Ra Spielautomaten Book Of Ra Deluxe Online Um Echtgeld Spielen: Tipps Und Strategien Mit

Spinyoo Local casino Personal

Content Promotions And you may Bonuses Luckybud Local casino: a hundred No-deposit Totally free Spins For the Publication Of Pyramids Customer service try integrated so