15112 நக்கீரம் 2011. (பொறி 12).

ஸியாளினி தனபாலசிங்கம் (இதழாசிரியர்). கொழும்பு 12: சட்ட மாணவர் இந்து மகாசபை, இலங்கை சட்டக் கல்லூரி, 244, ஹல்ஸ்ரோப் (புதுக்கடை) வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2011. (கொழும்பு 12: வக்மீ பிரின்டர்ஸ், 258/3, டாம் வீதி).

xii, 216 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18 சமீ.

இலங்கைச் சட்டக் கல்லூரியின் சட்ட மாணவர் இந்து மகா சபையின்; 2011ஆம் ஆண்டுக்கான ஆண்டு மலர் இதுவாகும். பல்வேறு தமிழ் ஆங்கிலக் கட்டுரைகளுடன் வெளிவந்துள்ளது. ஆசிச் செய்திகள், வருடாந்த அறிக்கைகளுடன், சமயம் என்ற முதற் பிரிவில் இந்து கலாசாரம் (க.வி.விக்னேஸ்வரன்), திருவாசகம் காட்டும் மறைஞானம் (எம்.கணேஷ்), இறைவனை வாழ்த்துவது ஏன் (சோபனா அசோகதாஸ்), நீதி பிறழா நெறிமுறையில் (இந்தி விமலேஸ்வரன்), இயற்கையின் சட்டங்கள் (ஆனந்த தாமோதரதாஸ்), சிலப்பதிகாரமும் கண்ணகியின் தன் அடிமைத்தனமும் (யோகானந்தி யோகராசா) ஆகிய தமிழ் ஆக்கங்களும், சட்டம் என்ற இரண்டாவது பிரிவில், வரையறுக்கப்பட்ட ஷோகுன் நிதி நிறுவனம் எதிர் ஹட்சன் வழக்கு-பிரபுக்கள் சபை தீர்ப்பு-நழுவவிடப்பட்ட சந்தர்ப்பமொன்றா? (அபிராமி பெரியசாமி), அதிகரித்துவரும் குடும்ப வன்முறைகளும் வீட்டு வன்முறைகள் தடுப்புச் சட்டமும் (துளசிகா கேசவன்), அரசியல் அபிலாசையாகும் அனைத்து உலக மனித உரிமைகள் பிரகடனம் (கே.ரீ.கணேசலிங்கம்), மீளொப்படைப்பு விடயத்தில் அரசியல் குற்றம் என்ற விதிவிலக்கு (ஸ்ரீசண்முகன் கோகுலன்), இலங்கையின் மணமுறிவுச் சட்ட ஏற்பாடுகள் (ஸியாளினி தனபாலசிங்கம்), இலங்கைச் சட்டங்களில் குற்ற ஒப்புதல் (ஆர்.பிரியதர்சினி), பகிரங்க நம்பிக்கைப் பொறுப்பு கோட்பாடு (கே.ஏ.சுபாஜினி) ஆகிய தமிழ் ஆக்கங்களும், அரசியல் என்ற மூன்றாவது பிரிவில், அரசியலமைப்பு வாதம்: இலங்கையின் இன மோதல் தீர்வு முயற்சியில் அரசியலமைப்புசார் தோற்றப்பாடுகளின் வகிபங்கு (ராஜரட்ணம் ருக்ஷான்), மனையறத்தின் வேர் (சு.செல்லத்துரை), இனத்துவம், வன்முறை மற்றும் இனமோதல்: கோட்பாட்டிலிருந்து நடைமுறைக்கு (எம்.பீ.எம்.ரமீஸ்), இலங்கை அரசும் தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகக் கோட்பாடும் (சாந்தி சச்சிதானந்தன்), ஜனநாயகம்-பயங்கரவாதம்-மனித உரிமைகள் நவீன அரசுகள் (அ.நிக்ஸன்) ஆகிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

casino madrid en línea

Excelente casino madrid online 10 euros casino gratis sin depósito Casino madrid en línea Om de algehele sterbeoordeling en procentuele uitsplitsing per ster te berekenen,