15114 அமுத நாதம்: அமுதவிழா மலர் 1939-2019.

க.நித்தியபாபுதரன் (மலராசிரியர்). தெல்லிப்பழை: திருவெம்பாவை கூட்டுப்பிரார்த்தனை சபை, பன்னாலை, 1வது பதிப்பு, ஜனவரி 2020. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).

158 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17 சமீ.

பன்னாலை திருவெம்பாவைக் கூட்டுப் பிரார்த்தனைச் சபையின் எண்பதாவது ஆண்டு நிறைவினை கொண்டாடியபோது 18.01.2020 அன்று இவ்விழாவினை மெருகூட்டிச் சிறப்பிக்கும் வகையில் வெளியிடப்பட்ட மலர் இதுவாகும். சபையின் தோற்றமும் வளர்ச்சியும் செயற்பாடுகளும் அறநெறிப் பாடசாலையின் செயற்பாடுகளும் வளர்ச்சியும், சாதனைகளும் மெய்யறிவாளர்கள், பேரறிவாளர்கள் வழங்கிய சைவ சமயக் கட்டுரைகள் என்பவற்றை சமூக நோக்குடன் எதிர்காலச் சந்ததியினருக்கு வெளிப்படுத்தும் சிறந்த பொக்கிஷமாக அமுதநாதம் அமைந்துள்ளது. திருவெம்பாவை கூட்டுப்பிரார்த்தனைச் சபையின் வரலாறு, பன்னாலையூர் தல வரலாறுகள், மடங்களும் ஆதீனங்களும், உடம்பினை வளர்க்கும் உபாயம், மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதி கொடுக்கும் மதி, யாழ்ப்பாண கலாச்சாரம் கந்தபுராண கலாச்சாரம்: ஒரு மீள்வாசிப்பு, அமுதால் உன்னைப் பெறலாமே, வில்லுப்பாட்டு தோற்றமும் வளர்ச்சியும், எல்லோருக்குமாக கல்வியின் இலட்சியம், சமயம் காட்டிய விஞ்ஞானம், விஞ்ஞானத்தின் மூலம் சைவசமயமே, திருநாவுக்கரசு நாயனார் தேவாரத்தில் தொன்மம், சைவசித்தாந்தத்தில் பதிக் கோட்பாடு, ஈழத்துக் கவிதை மரபில் சோமசுந்தரப் புலவர், சிவனுக்கு உகந்த திருவெம்பாவை விரதம், ஆடும் பெருமானின் ஆனந்த தாண்டவம், ஆதிரை நாளில் சிவன், சைவசமயம் வழிகாட்டும் ஆன்மீக வாழ்வு, அறநெறிக் கல்வியின் முக்கியத்துவம், இந்து அறநெறிப் பாடசாலைகளின் முக்கியத்துவம், வாழ்வில் இந்துவாய் இருந்திடு மானிடா, மகிழ்ச்சியான உலகை உருவாக்குவோம், ஆரோக்கிய வாழ்வு தரும் யோகக் கலை, பாவங்களின் ஊடாக ரஸங்களின் வெளிப்பாடு, வேண்டாம் இக்கவலை, ஜீவகாருண்யம், சக்தி வழிபாடு, பஞ்ச மகிமை, சமயநெறி, பெரியபுராணம், நடராஜப் பெருமானும் ஆருத்ராதரிசனமும் ஆகிய தலைப்புகளில் இப்படைப்பாக்கங்கள் எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Personal 5 Put Ports And Casinos

Content Highest Limits Against Lower Stakes Position Game Different varieties of Slots Online slots games No-deposit Incentive Us I don’t have A deposit Means Appropriate