15117 மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம் சித்திரத் தேர் வெள்ளோட்ட சிறப்பு மலர்-1993.

மு.சிவஞானம், பெ.ஆறுமுகம், எஸ்.செல்வகுமார் (தொகுப்பாசிரியர்கள்), என்.அருளானந்தம் ( உதவி ஆசிரியர்). மாத்தளை: மலர் வெளியீட்டுக் குழு, அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம், 1வது பதிப்பு, மார்ச் 1993. (மாத்தளை: Bravi Printers).

(120) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18.5 சமீ.

1993ம் ஆண்டு மாசிமக மகோற்சவ பஞ்சரத பவனி சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா 03.03.1993 அன்றும், இரதோற்சவம் 07.03.1993 அன்றும் நடைபெற்றன. அதையொட்டி வெளியிடப்பெற்ற சிறப்பு மலர் இதுவாகும். 1983 இனக்கலவரத்தின் போது இவ்வாலயம் சேதமாக்கப்பட்டதுடன் பஞ்சரதங்களுடன் பல லட்சம் ரூபா பெறுமதியான ஆலய உடைமைகளும் எரிந்து சாம்பராயின. பத்தாண்டுகள் கடந்த நிலையில் புதுச் சித்திரத்தேர் 1993இல் உருவாக்கி வெள்ளோட்டம் விடப்படுகின்றது. இச்சிறப்பிதழில் வாழ்த்துரைகள், ஆசியுரைகள் ஆகியவற்றைத் தொடர்ந்து அன்னை பராசக்தி (க.அருணாசலம்), மலையகக் கோவில்களிற் காணப்படும் கட்புலக் கவின் கலைகள் (ந.வேல்முருகு), மாநிலம் காக்க வந்தாள் மாதா முத்துமாரி (ஜெகதாம்பாள் நாகேந்திரம்), அன்னை பராசக்தியின் மகிமை (வீ.நமசிவாயம்), மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம் ஒரு வரலாற்று நோக்கு (மாத்தளை வடிவேலன்), திருவருளை வேண்டிநிற்கும் திருத்தேர் (வ.பாலகிருஷ்ணன்), மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மனின் ஆலயம் மலையகத்துக்கு ஓர் ஆதீனமாக மலர வேண்டும் (எஸ்.இராமநாதன்), சமய குரவரும் தனித்துவ ஆளுமைகளும் (துரை மனோகரன்), மதமும் பண்பாடும் (கு.கனகராஜ்), அன்னை முத்துமாரி (மாத்தளை ராஜ்சிவா சிவலிங்கம்), தாலியைக் காத்து மகிமை புரிந்தவள் அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன் (மாத்தளை ரோகிணி), சைவசமயத்தின் சிறப்பு (மாத்தளை எஸ்.பொன்னுத்துரை), ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான வரலாறு (றா.தேவமலர்), இரதோத்சவத்தின் தத்துவம் (சங்கரேஸ்வரி மகாராஜா), அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான சித்திரத்தேர் (தங்கவேலுப்பிள்ளை சௌமியா), அம்பாள் துணை (மலைமதி சந்திரசேகரன்) ஆகிய ஆக்கங்கள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Eu Casino Utan Svensk Tillstånd

Content Är Det Lagligt Att Försöka Gällande Någon Casino Inte me Spelpaus? Skillnader Emellan Casinon Inte med Koncessio Samt Svenska språket Casinon Hurså Skänke Casinon