15120 கந்தபுராணம்.

கே.வி.குணசேகரம். கொழும்பு: இந்து சமய அறநெறிக் கல்விப் பிரிவு, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சு, 2வது பதிப்பு, 2019. 1வது பதிப்பு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

x, 126 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ., ISBN: 978-955-9233-99-2.

வடமொழியில் அமைந்த பதினெண் புராணங்களுள் ஸ்கந்த புராணத்தின் சங்கரசங்கிதையிற்  சிவரகசிய காண்டத்தில் வரும் முதல் ஆறு காண்டங்களினதுங் கச்சியப்ப சிவாசாரியாரின் தமிழ் மொழிபெயர்ப்பே கந்தபுராணம். முருகப் பெருமானின் வரலாற்றை முறையாகவும் முழுமையாகவுங் கூறும் மகோன்னத நூல் இது. ஆணவம் அழிவைத் தரும், எம் செயலால் ஆவது யாதொன்றுமில்லை, அனைத்தும் இறை செயலே என்பதைப் பசுமரத்தாணியாக உரைப்பது இப்புராணம். “கந்தபுராணத்தில் இல்லாதது வேறு எந்தப் புராணத்திலும் இல்லை” என்று சிறப்பிக்கும் அளவிற்கு உன்னதமான இந்நூலினை இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்கள் ஒவ்வொருவருங் கற்றுப் பயனுறும் வகையில் இலகு தமிழ் நடையில் அமைய வேண்டும் என்ற இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கோரிக்கையில் முகிழ்த்ததே இந்நூல். கந்தபுராண வரலாறு, சூதமுனிவர் முருகப்பெருமான் வரலாறு கூறுதல், உமாதேவியார் மலையரசன் மகளாகப் பிறத்தல், மன்மதன் சிவபெருமானின் தவங் கலைக்க முயல்தல், சிவன்-உமை திருமணம், அகத்தியர் முனிவர், சிவன் நெற்றிக்கண் திறத்தல், முருகப் பெருமானின் திருவிளையாடல்கள், பிரமனைச் சிறையிலடைத்தல், தந்தைக்கு உபதேசஞ் செய்தல், அமிர்தவல்லியும் சுந்தரவல்லியும், முருகப்பெருமான் அசுரர்களை அழிக்கப் புறப்படல், சூரபத்மன் சபதம் பூணல், காசிப முனிவரும் மாயையும் உபதேசம், மார்க்கண்டேயன் கதை, அசுரர்கள் தேவர்களைத் துன்புறுத்தத் தொடங்கல், சூரனுக்குத் தேவதச்சன் அரண்மனை அமைத்தல், வாதாபியும் வில்லவனும், வாதாபியும் வில்லவனும் அகத்திய முனிவரால் வதஞ்செய்யப்படல், விநாயகர் திருவிளையாடல், பாற்கடல் கடைந்த கதை, அசமுகி படலம், வீரவாகு தேவர் மகேந்திரபுரியை அடைதல், தேவர்கள் துன்பம் அனுபவித்தல், சயந்தன் கனவு கண்டு மகிழுதல், வீரவாகு தேவர் சூரனைக் காணல், சூரன் வீரவாகு தேவரைக் கொல்லக் கட்டளையிடல், சூரனுக்கு உளவுரைத்தல், முருகன் சூரரை சூரனை அழிக்கப் புறப்படல், நாரதர் சமாதானம் பேசுதல், பானுகோபன் போருக்குப் புறப்படல், போர் உக்கிரமடைதல், பானுகோபன் மாயையிடம் படைக்கலம் பெறுதல், சூரபத்மன் தன் குமாரர்களை இழத்தல், பானுகோபன் மரணமடைதல், சிங்கமுகன் போருக்குப் புறப்படல், சிங்கமுகன் மாண்டு போதல், சூரன் முருகனோடு போரிடல், முருகப்பெருமான் திருப்பெரு வடிவமெடுத்தல், முருகன் தெய்வயானை திருமணம், உமாதேவியார் தக்கனுக்கு மகளாகப் பிறத்தல், தக்கன் யாகத்தில் சிவனைப் புறக்கணித்தல், வீரபத்திரர் தோன்றுதல், முருகன் வள்ளி திருமணம் ஆகிய 44 அத்தியாயங்களில் கந்தபுராணக் கதை இந்நூலில் விரிந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Prepeleac Up 888 Casino

Content Pop Up Cpk Bicolor 8 Mm Fructe Dulci Picior, Picioaresubstantiv Neutral Unirea Bucovinei Ce România Articole Recente Rușii Ban Să Afla Descântec Progrese Pe