15122 சம்பந்தசரணாலய சுவாமிகள் அருளிச்செய்த கந்தபுராணச் சுருக்கம் விருத்தியுரையுடன்.

சம்பந்தசரணாலய சுவாமிகள் (மூலம்), அ.ஸ்கந்தராஜ் (பதிப்பாசிரியர்). கொழும்பு 4: அருணாசலம் ஸ்கந்தராஜ், 15, பாரீட் இடம், 1வது பதிப்பு, 2021. (அச்சக விபரம் தரப்படவில்லை).

xiv, 286 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

இந்நூலில் அறிமுக உரை, சம்பந்தசரணாலய சுவாமிகள் சரித்திரச் சுருக்கம், கந்தபுராணச் சுருக்கத்தைத் தழுவிய கதைவடிவ நூலின் முகவுரை ஆகிய ஆரம்ப பகுதிகளையடுத்து, பாயிரம், புராண வரலாறு, முதலாவது உற்பத்தி காண்டம், இரண்டாவது அசுர காண்டம், மூன்றாவது மகேந்திர காண்டம், நான்காவது யுத்தகாண்டம், ஐந்தாவது தேவ காண்டம், ஆறாவது தக்க்ஷ காண்டம் ஆகிய அத்தியாயங்களில் கந்தபுராணச் சுருக்கம் விருத்தியுரையுடன் எழுதப்பட்டுள்ளது. நான்காவது யுத்தகாண்டம் என்ற அத்தியாயத்தில் முதலாவது நாள்- பானுகோபன் யுத்தம், இரண்டாவது நாள்- சூரபன்மன் யுத்தம், மூன்றாவது நாள்- பானுகோபன் யுத்தம், மூன்றாவது நாள் இரவு- இரணியன் யுத்தம், நான்காவது நாள்- அக்கினிமுகாசுரன் யுத்தம், நான்காவது நாள்- மூவாயிரம் மைந்தர்கள் யுத்தம், நான்காவது நாள் இரவு- தருமகோபன்; யுத்தம், ஐந்தாவது நாள்- பானுகோபன் யுத்தம், ஆறாவது நாள்- சிங்கமுகாசுரன் யுத்தம், ஏழாவது நாள்- சூரபன்மன் யுத்தம் ஆகிய உப தலைப்புகளின் கீழும் இந்நூல் விரிவாக்கப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்