15128 திருமுறைத் தொகுப்பு : இ.நல்லதம்பி அவர்களின் சிவபதப் பேற்றின் நினைவு மலர்.

மலர்க் குழு. நீர்கொழும்பு: இந்து வாலிபர் சங்கம், 134, கடற்கரைத் தெரு, 1வது பதிப்பு, ஏப்ரல் 1964. (அச்சக விபரம் தரப்படவில்லை).

vi, (2), 81 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×13.5 சமீ.

ஊர்காவற்றுறை-சுருவில் கிராமத்தைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வாழ்விடமாகவும் கொண்ட வர்த்தகர் இ.நல்லதம்பி ஜே.பீ. அவர்கள் நீர்கொழும்பு இந்து வாலிபர் சங்கத்தின் தலைவராவும், நீர்கொழும்பு சித்தி விநாயகர் கோவில் தர்மகர்த்தா சபையின் பிரமுகராகவும் இருந்து சமூகப் பணியாற்றியவர். தனது 48 வயதில் மரணமடைந்த அவரின் ஞாபகார்த்தமாக அந்தியேட்டி நிகழ்வின் போது வெளியிடப்பட்ட மலர் இது. திருஞான சம்பந்த சுவாமிகள் தேவாரம், திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம், சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம், மாணிக்கவாசக சுவாமிகள்  திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருமந்திரம் பட்டினத்தார் பாடல், பெரிய புராணம், கந்த புராணம், திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரநுபூதி, திருமுருகாற்றுப்படை, தாயுமானவர் பாடல்கள், மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், மதுரைக் கலம்பகம், நீதிநெறி விளக்கம், திருவாரூர் நான்மணிமாலை, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ், சிதம்பர மும்மணிக் கோவை, சிதம்பர செய்யுட்கோவை, பண்டார மும்மணிக் கோவை, காசிக் கலம்பகம், திருக்குறள் ஆகிய பக்தி இலக்கியங்களின் தேர்ந்த தொகுப்பாக இது அமைந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Daha İyi Para Yatırma Gerektirmeyen Teşvikler 2024

Bazı para yatırma gerektirmeyen teşvikler benzersiz para yatırma gerektirmeyen ekstra gereksinimler gerektirebilir. Onu web sitenize veya insanların kumarhaneyi seçtiği ek bonus sayfasına tanıtılmış olarak bulacaksınız.Ayrıca,

16998 நோபல்பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் – 12 (1995-1999).

நா.சு.சிதம்பரம். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street).  80 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 280., அளவு: