15131 நாயன்மார் பாடல்கள் : சமயம்-தத்துவம்-வரலாறு.

தி.செல்வமனோகரன். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 1வது பதிப்பு, 2020. (கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park).

viii, 116 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-685-160-01.

இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் பெரும்பாலானவை இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நடாத்திய வருடாந்தக் கருத்தரங்குகளில் (2013-2017) வாசிக்கப்பெற்றவை. திருமுறைகள் பற்றிய வாசிப்பு காலந்தோறும் பல முனைகளில் நிகழ்ந்துவந்துள்ளன. அவற்றின் வழியுருவான வரலாற்றியல் மற்றும் கால ஆராய்ச்சிகள், சமூக, மானிடவியல் தளத்திலான நோக்குகள், சொல்லாய்வுகள், ஒப்பீட்டு முறையியல் போன்றன குறித்த காலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கருவிகளாகத் திருமுறைகளை நோக்க வைத்தன. ஆசிரியர் இக்கட்டுரைகளை மேலைத்தேய அறிகைவழிகளைக் கொண்டல்லாது, திருமுறைகள் தோன்றிய காலம், சூழல், பண்பாட்டியல், சமய, தத்துவவியல், அவற்றுக்கான அரசியலைப் புரிதலின் வழியாக நோக்கி இக்கட்டுரைகளை எழுதியுள்ளார். இத்தொகுப்பில் சம்பந்தர் பாடல்களில் அறிவாராய்ச்சியியற் சிந்தனைகள், தேவாரங்களூடாகப் புலப்படும் சைவப் பிரிவுகள், தேவாரங்களின் அகப்பொருளியல் மரபு, தேவாரங்களில் நிலையாமை, மாணிக்கவாசகர் பாடல்களில் கன்மக் கோட்பாடு, திருமந்திரத்தில் சங்கம வழிபாடு, சமய சமூக ஒருமைப்பாடு: திருமந்திரத்தினூடாக ஒரு வாசிப்பு, நம்பியாண்டார் நம்பியின் சமயநோக்கு, பெரிய புராணத்தில் சமயவனுபவம் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட ஒன்பது கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

new online casino

Online casino real money Free online casino New online casino To start earning, you have to enter tournaments for free and try to win cash