15134 மகாபாரதம்.

கே.வி.குணசேகரம். கொழும்பு: இந்து சமய அறநெறிக் கல்விப் பிரிவு, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சு, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

ix, 163 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×17.5 சமீ.

அறம் வெல்லும் மறம் அழிவினைத் தரும் என்பதும் அவரவர் நல்வினை தீவினைக்கேற்ப நன்மை தீமைகள் விளையும் என்பதுந் தீமையைக் கொண்டு தீமையை அகற்ற இயலாது என்கின்ற உன்னத படிப்பினையை வழங்கும் மகோன்னத காவியம் மகாபாரதம். கௌரவர் பாண்டவர்களுக்கிடையில் நடைபெற்ற போர், அதர்மத்துக்குந் தர்மத்துக்கும் இடையில் நடைபெற்ற போர் தர்மத்தின் பக்கம் இறைவன் நின்று வழிநடத்திய போர்: பகவத் கீதை உபதேசம் நிகழ்ந்த குருஷேத்திரப் போர் நிகழ்ந்த வரலாற்றைக் காட்டும் ஒப்பற்ற காவியமிது. வடமொழியில் வியாசர் கூற விநாயகப் பெருமானால் எழுதப்பட்ட இந்த இறை காவியத்தைத் தமிழில் வில்லிபுத்தூராழ்வார் பாடியுள்ளார். இதனை அடியொற்றி இந்து சமய அறநெறிக் கல்வியின் புதிய பாடத் திட்டத் துணைநூல்களில் ஒன்றாக மகாபாரதம் என்னும் பெயரில் இந்நூல் ஆக்கப்பட்டது.

ஏனைய பதிவுகள்

14146 நல்லைக்குமரன் மலர் 1999.

நல்லையா விஜயசுந்தரம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 1999. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி). (6), 137 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

17193 வேர்கள்.

கமலினி கதிர். சுவிட்சர்லாந்து: திருமதி கமலினி கதிர்காமத்தம்பி, Neunbrunnenstrasse 6, 8050 Zurich, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2023. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி). xii, 58 பக்கம்,