15136 முதுபெரும் புலவர் அமரர் திரு. வை.க.சிற்றம்பலம் அவர்கள் இயற்றிய பாடல்கள்.

வை.க.சிற்றம்பலம் (மூலம்), எஸ்.சிவானந்தராஜா (பதிப்பாசிரியர்). பண்டத்தரிப்பு:  எஸ்.சிவானந்தராஜா, இந்துக் கல்லூரி வீதி, செட்டிகுறிச்சி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2018. (யாழ்ப்பாணம்: சாய்ராம் பிரின்டர்ஸ், சங்கானை).

74 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 16.5×14.5 சமீ.

புலவர்மணி, கலாபுஷணம், முதுபெரும் புலவர் திரு. வை.க.சிற்றம்பலம் (1914-2013) அவர்கள் 1931 முதல் 1970 வரையுள்ள காலப் பகுதியில் பாடசாலை ஆசிரியர் பணியை மேற்கொண்டவர். நான்மணிமாலை (4), மும்மணி மாலை (3), திரு இரட்டை மணி மாலை (3), ஒருபா ஒருபஃது (4), இணைமணி மாலை (1), போற்றிப்பத்து (1), இடர்களை பதிகம் (1), திருவருக்கமாலை (1), திருப்பள்ளிஎழுச்சி (1), திருவூஞ்சல்கள் (3), பிள்ளைத் தமிழ் (3), அந்தாதி (1), கலம்பகம் (1) எனப் பல்வகைப் பிரபந்தங்களையும் இவர் தனது வாழ்நாட்காலத்தில் பாடி அருளியுள்ளார். அவற்றில் தேர்ந்த சிலவற்றை இந்நூல் பதிவுசெய்துள்ளது. இந்நூலில் தொண்டைமானாறு-சந்நிதியான் ஆச்சிரமத்தின் வெளியீடான “ஞானச்சுடர்” வெளியீட்டில் பிரசுரமான 55 பாடல்களுடன், சிவனடியார்கள் (அருள் ஒளி, ஆனி 2004), ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் (அருள்ஒளி மார்கழி 2003) ஆகிய கட்டுரைகளையும், புலவரின் 15 பக்தி இலக்கியப் பாடல்களையும் தொகுத்துப் பதிப்பித்துள்ளனர். 

ஏனைய பதிவுகள்

Nuts Dollars Slot Remark

Posts When to Switch to Cash Playing? Is actually Online slots Rigged? Piggy Bankin Lock It Connect Grand Jackpot Winnings 130k The design Idea Of