15138 வழிபாட்டுத் தெய்வங்களில் ஐயப்பன்.

எஸ்.சிவானந்தராஜா. பண்டத்தரிப்பு:  எஸ்.சிவானந்தராஜா, இந்துக் கல்லூரி வீதி, செட்டிகுறிச்சி, 1வது பதிப்பு, டிசம்பர் 2018. (வழக்கம்பரை: ஸ்ரீ மாருதி அச்சகம்).

20 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-38461-4-3.

இந்நூலாசிரியர், இலங்கையில் ஐயப்பன் வழிபாட்டின் பின்னணியில், சுழிபுரம் மேற்கு ஸ்ரீ ஹரிஹரபுத்திர ஐயனார் கோவில் பற்றிய தகவல்களைத் திரட்டி இந்நூலில் தந்திருக்கிறார். தமிழர் வழிபாட்டுத் தெய்வங்கள், ஹரிஹரபுத்திரன், இலங்கையில் உள்ள ஐயனார் ஆலயங்கள், ஐயனார் காதை, சுழிபுரம் மேற்கு ஹரிஹரபுத்திர ஐயனார் ஆகிய 5 தலைப்புகளில் இத்தகவல்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

15592 முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை கவிதைகள் (விழா மலர்-1).

கு.முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை. சுன்னாகம்: கு. முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை அவர்களின் எண்பத்தாறாம் ஆண்டு நிறைவுவிழாக் குழு, மயிலணி, 1வது பதிப்பு, 1986. (ஏழாலை: மஹாத்மா அச்சகம்). xiv, 144 பக்கம், விலை: ரூபா 20.00, அளவு: 18.5×13.5 சமீ.