15141 அத்தலாக்-விவாகரத்து நிகழ்வது எதற்காக? (பாகம் 1).

மௌலவி முஹம்மத் ரஸீன்-மழாஹிரி. குருநாகல்: தாருல் குர்ஆன் வெளியீட்டுப் பணியகம், இல. 100, கண்டி வீதி, மல்லவபிட்டிய, 1வது பதிப்பு, டிசம்பர் 2016. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44, புகையிரத நிலைய வீதி).

(14), 15-112 பக்கம், விலை: ரூபா 250.00, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-54746-3-4.

திருமண வாழ்வில் இணைந்த, இணையவுள்ள இருபாலாருக்கும், அவர்களின் பெற்றோர், இளம்வயதினர் என அனைவருக்கும் திருமண வாழ்வு பற்றிய படிப்பினைகளை விளக்கும் ஒரு நூல் இது. திருமணம் என்றால் என்ன? என்ற கேள்விக்கான பதிலுடன் தொடங்கும் இந்நூல், விவாகரத்துக்கு மூலகாரணமாக அமையும் விடயங்களை விவரிக்கத் தொடங்குகின்றது. திருமணத்தில் நம்பிக்கைத் துரோகம் செய்தல், போலி வாக்குறுதிகளை வழங்கல், மந்திரஜாலங்களால் துரோகமிழைத்தல், மாமனார்-மாமியார் கொடுமைகள், கணவன்-மனைவிக்கிடையில் புரிந்துணர்வின்மை, அநியாயக்கார மகனுக்கு நல்ல பெண்ணைத் தேட முயலும் தாயின் மனநிலை, பெற்றோரின் கவனயீனத்தால் ஏற்படும் சமூகச் சீர்கேடுகள் என்பன பற்றி இந்நூல் தனது அவதானிப்பைச் செலுத்துகின்றது. திருமணத்தில் தரகர்களின் லீலைகள், மோசடிகள், திருமணத்திற்கான வீண் விரயங்கள், ஒடிப்போன பெண் தன்னைத்தானே மணம் முடித்து வைக்கலாமா? இஸ்லாம் அனுமதிக்கும் காதல் எது? என்பன போன்ற அம்சங்களும் இந்நூலில் உள்வாங்கப்பட்டுள்ளன. இஸ்லாம் அனுமதிக்காத காதல் எது எனவும் அக்காதலின் காரணமாக ஏற்படும் இருபத்தியொரு பயங்கர விளைவுகள் பற்றியும் விளக்குகின்றது. சூனியம் என்றால் என்ன? சூனியத்தை நீங்கள் மறுக்கலாமா? சூனியம் செய்யக்கூடியவனுக்கு உரித்தான தண்டனை, சூனியம் பற்றி இஸ்லாத்தின் கருத்தென்ன? என்பன போன்ற பல விடயங்களை இந்நூல் ஆராய்கின்றது.

ஏனைய பதிவுகள்

Guide From Ra Luxury

Content Postoji Li Mobilna Verzija Book Away from Ra? Other Greatest Harbors Winrar 7 00 Korean 64 Piece The sea Of Theft Beta Lands To