கமலா குணராசா (மூலம்), க.குணராசா (மீள்பார்வை). யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை வெளியீடு, 234 காங்கேசன்துறை வீதி, வெளியிட்ட ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், 234, காங்கேசன்துறை வீதி).
64 பக்கம், வரைபடங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 16.50, அளவு: 20×13.5 சமீ.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் புதிய பாடத்திட்டத்தின்கீழ் அமுல்படுத்தப்படும் சமூகக்கல்வி பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள்களும் அதற்கான விடைகளும் அடங்கியுள்ள நூல். இரண்டு பகுதிகளாகப் பிரித்து கேட்கப்படும் கேள்விகளில் முதற் பகுதியில் 40 பலவினக் கேள்விகள் வழங்கப்பட்டு, ஒவ்வொரு கேள்விக்கும் பொருத்தமான விடையை நான்கு பதில்களிலிருந்து மாணவர் தேர்வுசெய்வதாகவும் அமைகின்றது. பகுதி-2இல் 10 முதல் 12 வரையிலான கேள்விகளை வழங்கி அவற்றில் முதலாம் கேள்விக்கு கட்டாயம் விடை தருவதுடன் ஏனையவற்றில் ஐந்து கேள்விகளை தேர்வுசெய்து மாணவர் விடைகளை சமயோசிதமாக எழுதவேண்டும். இந்நூலில் அத்தகைய ஐந்து மாதிரி வினாப்பத்திரங்கள் அவற்றிற்கான விடைகளுடன் தரப்பட்டுள்ளன. சமூகக் கல்வி மாணவர்கள் எவ்வாறு பரீட்சையில் விடைகளை வழங்கவேண்டும் என்ற ஆலோசனையை இந்நூல் வழங்குகின்றது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18632).