15152 வரலாறும் சமூகக் கல்வியும்-படவேலைப் பயிற்சிகள் செயல்நூல்-ஆண்டு 11.

கமலா குணராசா (மூலம்), க.குணராசா (மீள்பார்வை). யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 1993. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா அச்சகம், 234, காங்கேசன்துறை வீதி).

60 பக்கம், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×20 சமீ.

கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண) வகுப்பு மாணவர்களின் வரலாறும் சமூகக் கல்வியும், பரந்ததொரு பாடத்திட்டத்தைக் கொண்டதாகும். இப்பாட அலகிலுள்ள பட வேலைப் பயிற்சிகள், வினாக்களின் பல்வேறு கட்டங்களிலும் இடம்பெறுகின்றன.  எனவே, படவேலைப் பயிற்சிக்கான செயல்முறைப் பயிற்சிகள் அவசியமாகின்றன. அத்தேவையை இந்நூலில் சமவுயரக் கோட்டுப் பயிற்சிகள், உலகப் படப் பயிற்சிகள், இலங்கைப் படப் பயிற்சிகள் பல தரப்பட்டுள்ளன. அவற்றில் வரலாறு, சமூகக் கல்வி சார்ந்த வினாக்கள் வினாவப் பட்டுள்ளன. இப்பயிற்சிகளை மீண்டும் மீண்டும் செய்வதன் மூலம் நமது செயலறிவைத் திறம்பட அபிவிருத்தி செய்ய முடியும். பரீட்சை நோக்கிற்கு மட்டுமன்றி, நமது பரந்த அறிவு விருத்திக்கும் இச்செயல்நூல் உதவுகின்றது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 78453).

ஏனைய பதிவுகள்

Prime À l’exclusion de Wager

Aisé Sinspirer Dautres Parieurs: immortal romance machine à sous Comme Recevoir Í  tous les Instrument Pour Dessous? Façon Ou Formule Casino Les bons Éditeurs Vivent