என்.சரவணன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2020. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xvi, 152 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 450., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-659-660-1.
சிங்கள சமூக அமைப்பில் கன்னிப் பரிசோதனை சடங்கு, பண்டைய சிங்கள சாதியத்தை பேணிய கோத்திர சபை, “ஒரே வீட்டில் புசித்தல்” சிங்கள சமூக அமைப்பில் ‘பல கணவர் முறை”, மட்டக்களப்பு டச்சுக் கோட்டை பௌத்த விகாரையா?, சிங்கள பைலாவின் தோற்றிடம், வேடுவர் ஆய்வின் வேர், “பமுனு குலய” சிங்களப் பார்ப்பனியமா?, “ரதல” பிரபுக்களால் பறிபோன இலங்கை, பண்டைய இலங்கையின் பாலியல் வழக்குகள், சாவு வரியிலிருந்து முலை வரிவரை, சிங்களப் போரிலக்கியத்தில் “பறங்கி மகாப் போர்”, யார் இந்த “அப்புஹாமி”?, சிங்களப் பெயர்களின் சாதிய, நிலப்பிரபுத்துவ, காலனித்துவப் பின்புலம் ஆகிய 13 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. என்.சரவணன், மார்க்சியம், பெண்ணியம், தலித்தியம், தமிழ்த் தேசியம் தொடர்பான தீவிர எழுத்துச் செயற்பாட்டாளராக அறியப்பட்டவர். இந்நூலிலுள்ள கட்டுரைகளில் சிங்களச் சமூகங்களில் சாதியத்தின் தாக்கம், பெண்களின் நிலை, பண்பாட்டுப் பழக்க வழக்கங்கள், இசை, திருமணச் சடங்குகள், பாலியல் வழக்குகள், அதிகாரப் போட்டிகள், பொருளாதாரம், இலக்கியம் எனப் பல்வேறு சமூக, பண்பாட்டுக் கூறுகள் ஆராயப்படுகின்றன.