15157 சமாதானத்தின் குரல்கள்: அவர்களும் எங்களைப் போன்றவர்களே.

சாரா கபீர் (ஆங்கில மூலம்), முனீரா முத்தாஹிர் (புகைப்படங்கள்), சோபியா மகேந்திரன் (தமிழாக்கம்). கொழும்பு: சாரா கபீர், 1வது பதிப்பு, 2021. (கொழும்பு: குணரட்ன ஓப்செட் பிரைவேட் விமிட்டெட்).

512 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 1200., அளவு: 24.5×16 சமீ., ISBN: 978-624-97572-0-2.

Voices of Peace (சமாதானத்தின் குரல்கள்) இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த பத்து பேரினதும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பத்து முன்னாள் போராளிகளின் கதைகளினதும் தொகுப்பாகும். முன்னொரு காலத்தில் போர்க்களத்தில் தீவிரமாகப் போராடிய இவர்கள், தற்போது சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கான சாட்சிகளாகத் திகழ்கின்றனர். ”சமாதானத்தின் குரல்களில்” குறித்த நபர்களைப் பற்றி பேசுவதை விட அவர்களின் கதைகளுக்கு நாம் செவிமடுக்க அழைக்கப்படுகிறோம். நீண்ட காலமாக இனவாதத்தால் பிளவுபட்டுள்ள ஒரு நாட்டில் மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரையும் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்பாக இது அமைவதுடன் பொதுவான இலக்குகளை நோக்கிய நீண்ட பயணம் பற்றி சிந்திப்பதற்கான அவகாசத்தையும் இது எமக்கு அளிக்கின்றது. மோதல் மற்றும் மோதலுக்குப் பிந்தைய காலப் பகுதியில் எமக்கு வெளிப்படுத்தப்படாத நிலவரங்களின் தொகுப்பாக இது அமைகின்றது. இந்நூலின் முக்கிய நோக்கம் மக்களிடையே அர்த்தமுள்ள விவாதத்தை ஊக்குவிப்பதும் ஆரோக்கியமான கலந்துரையாடல்களுக்கு வழிவகுப்பதுமாகும். இனங்களுக்கிடையேயான மோதலுக்கான அடிப்படைகளை இந்நூல் பேசுபொருளாக்காத போதிலும், இதன் மூலம் இலங்கையின் பன்முகத் தன்மையை அடையாளப்படுத்துவதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் அதனைக் கொண்டாடுவதற்கும் எதிர்பார்க்கின்றது. இத்திட்டத்திற்கான நிதியுதவியை Historical Dialogue.LK இலங்கையின் நல்லிணக்கச் செயல்முறைகளை வலுப்படுத்துவதற்கான முயற்சி உடன் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜேர்மன் வெளியுறவுத்துறை அலுவலகம், சுவிஸ் மத்திய வெளியுறவுத் துறை, எக்ஸ்போ லங்கா, ONUR ஆகிய நிறுவனங்களும் சில தனிப்பட்டவர்களும் வழங்கியுள்ளனர். இவ்வறிக்கை போராட்டத்தில் இணைதல், யுத்த வாழ்க்கையை நினைவு கூருதல், நெகிழ் கதவுகள், யுத்தத்திலிருந்து சமாதானத்தை நோக்கி நகருதல், நாங்கள் இன்று எங்கிருக்கின்றோம், காலத்திற்கேற்ற மாற்றம், சமாதானமும் நல்லிணக்கமும், எமது எதிர்காலம், ஆகிய எட்டு அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Erfahrungen 2024 Maklercourtage 900, 110 Freispiele

Ein findet an dieser stelle untergeordnet schnell angewandten entsprechenden Spielsaal Prämie Kode, darüber das angewandten Willkommensbonus geradlinig abholen könnt. Erreichbar Casino Maklercourtage Codes sie sind