செல்வி திருச்சந்திரன். கொழும்பு 6: பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம், 58, தர்மராம வீதி, 1வது பதிப்பு, ஆனி 2011. (ஹோமகம: கருணாரத்தின அன்ட் சன்ஸ், இல. 67, A+.B.V (U.D.A.) இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், கட்டுவான வீதி).
xi, 54 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23×16 சமீ., ISBN: 978-955-9261-58-2.
ஐக்கிய நாடுகள் சபையின் சனத்தொகைக்கான நிதியத்தின் ஆதரவுடன் (UNFPA) வெளியிடப்பட்ட நூல். வடமாகாணத்தில் பெண்கள் ஒதுக்கப்படல், கிழக்கின் வேறுபாடு, சமய உணர்வும் மலையகத்தில் அது பெண்களுக்கு ஏற்படுத்தும் இடர்ப்பாடும், மத வழிபாடு மற்றும் மத உட்பிரிவுகளுக்குள் மகளிர் அனுபவங்கள், பெண் பாலுணர்வும் அதை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளும் ஆகிய ஐந்து அத்தியாயங்களில் இவ்வாய்வு விரிந்துள்ளது. யாழ்ப்பாணம், திருக்கோணமலை, மலையகம், மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் இவ்வாய்வின்; நிமித்தம் விஜயம் செய்த இடங்களின் விபரங்கள் பின்னிணைப்பில் காணப்படுகின்றன. இவ்வாய்வுப் பணியில் சர்மிளா சின்னையா, பூங்கோதை தங்கமயில், சுதாஜினி ருசாங்கன் ஆகியோர் உதவி ஆய்வாளர்களாகப் பணியாற்றியுள்ளனர்.