மனோன்மணி சண்முகதாஸ். யாழ்ப்பாணம்: கோகுலம் வெளியீடு, இல. 90, ஞானவைரவர் வீதி, கோண்டாவில், 1வது பதிப்பு, 2015. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி).
xii, 156 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-98925-8-8.
இந்நூலில் ஆறு இயல்களின் ஊடாக பெண்களின் பாரம்பரியம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. எளிய மொழிநடையும் எடுத்துக்காட்டுகளும் எதிர்காலத்தில் தமிழர் தலைமுறை வாழிட மொழியிலே கருத்துரைகளைக் கூறுவதற்குத் துணை செய்யும். பெண்ணின் ஆற்றலும் சிறப்பும் தமிழிலக்கியங்களிலே மிகச் சிறப்பாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. தமிழ்ப் பெண்ணின் பாரம்பரியம் வீடு, சமூகம், நாடு எனும் முத்தளங்களிலும் தொடர்புற்றிருப்பதை இந்த நூல் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது. இலக்கியங்கள் காலத்தின் தேவையை நிறைவுசெய்யும் பணியையும் ஏற்றிருப்பவை. அந்தப் பணியை இனங்காணவும் இந்நூல் உதவும் என்பதில் ஐயமில்லை. இந்நூலில் உள்ள முதல் ஆறு அத்தியாயங்கள் பதினெண்மேற் கணக்கு இலக்கியங்களில் பெண், பதினெண்கீழ்க்; கணக்கு இலக்கியங்களில் பெண், பேரிலக்கியங்களில் பெண், பக்தி இலக்கியத்தில் பெண், புதுமை இலக்கியத்தில் பெண், இன்றைய காலத்தில் பாரம்பரியமும் பெண்ணும் ஆகிய அத்தியாயத் தலைப்புகளைக் கொண்டுள்ளதுடன் இறுதியில் நிறைவுரையையும் உள்ளடக்குகின்றது. இந்நூல் 32ஆவது நெல்லண்டை வெளியீடாக வெளிவந்துள்ளது.