மட்டக்களப்பு: விபுலம் வெளியீடு, 7 ஞானசூரியம்; சதுக்கம், 1வது பதிப்பு, 2007. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 261/1, திருமலை வீதி).
vi, 153 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×16 சமீ.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறைத் தலைவியாகப் பணியாற்றிய சித்திரலேகா மௌனகுரு ஈழத்து இலக்கியம், விமர்சனம், பண்பாடு, பெண்ணியம் ஆகிய ஆய்வுப் புலங்களில் தீவிரமாக ஈடுபட்டு உழைத்தவர். இந்நூலில் தமிழ் பெண்கள் இலக்கியப் பாாரம்பரியத்தைத் தேடி, தமிழ் இலக்கிய பாரம்பரியத்தில் ஒளவை, எல்லை தாண்டும் பொருளும் மொழியும்-இலங்கையில் பெண்கள் கவிதை, தன்னாற்றலினதும் உண்மையினதும் வெளிப்பாடாகக் காதல் கவிதைகள், நாட்டார் இலக்கியமும் பெண்களும்-சில பொதுக் குறிப்புகள், மலைநாட்டுப் பெண் தொழிலாளர் வரலாற்றில் சில புதிய தடயங்கள், மொழியும் அதிகாரமும் பெண்நிலை நோக்கிலான சில குறிப்புகள், தாயாகவும் காதலியாகவும் மொழி: புதல்வராகவும் காதலராகவும் எழுத்தாளர், வர்ணங்களில் உணர்வெழுதி அனுபவமும் ஓவிய மொழியும், மாற்றுக் கலாசாரமும் பெண்நிலை அரங்கும், தமிழ் இலக்கியமும் பெண்களும்-சில சவால்கள் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட இவரது கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.