15164 இலங்கையில் வேடர்: வாழ்வியலும் மாற்றங்களும்.

வடிவேல் இன்பமோகன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2020. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xx, 111 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-677-9.

உலகப் பண்பாடுகளில் பூர்வீக சமூகங்கள் எதிர்கொள்ளும் அடையாளம் சார்ந்த பிரச்சினைகள் இன்றைய மானிடவியல், இனவரைவியல் ஆய்வுப் புலங்களில் முக்கிய கவனம் பெறுகின்றன. இத்தகைய ஒரு சூழமைவில் கலாநிதி வ. இன்பமோகனின் “இலங்கையில் வேடர் வாழ்வியலும் மாற்றங்களும்” என்ற இந்நூலின் வரவு அமைந்துள்ளது. இந்நூலின் அறிமுக அத்தியாயத்தில் வேடர்களின் பூர்வீகம், வரலாற்றில் வேடர்கள், வேடர்களுக்கான நலன்புரித் திட்டங்களும் செயற்பாடுகளும் ஆகிய விடயங்கள் விளக்கப்பட்டுள்ளன. “வாழ்வியலும் ஏற்பட்ட மாற்றங்களும்” என்ற இரண்டாவது அத்தியாயத்தில் சமூக அமைப்பு, குடும்பம், தலைமைத்துவம், மொழியும் அதன் சமகால நிலையும், சடங்குகளும் தெய்வங்களும், உணவும் உணவீட்டமும், வாழ்விடம், வைத்தியம், ஆடை அணிகலன், கலை மற்றும் கைப்பணி மரபு ஆகிய பத்து விடயங்கள் விளக்கப்பட்டுள்ளன. “வாழ்வியல் நெருக்கடிகளும் அடையாள இழப்பும்” என்ற இறுதி அத்தியாயத்தில் வேடர்கள் சந்திக்கும் நெருக்கடிகள் பற்றியும் எதிர்கொள்ளும் சமூக மாற்றங்கள் பற்றியும் விபரிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்