ஆர்.எச்.எஸ்.குறொஸ்மன் (ஆங்கில மூலம்). கொழும்பு 3: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், ”சிறிமதி பாயா”, 58, சேர் ஏர்னெஸ்ட் த சில்வா வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 1970. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்).
x, 292 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×13.5 சமீ.
ஒக்ஸ்போர்ட், முன்னாள் நியூ கொலிஜ் கூட்டாளர் (Follow), பல்கலைக்கழக அறிஞர் R.H.S.Crossman அவர்கள் எழுதி லண்டன் Chatto and Windus Educational Ltd. வெளியிட்ட Government and the Governed என்ற நூலின் தமிழாக்கம் இதுவாகும். அறிமுகம், இக்கால அரசின் ஆரம்பம், இங்கிலாந்தில் ஏற்பட்ட புரட்சி, அமெரிக்கப் புரட்சி, பிரெஞ்சுப் புரட்சி, பிரித்தானியாவில் கைத்தொழிற் புரட்சி, தேசிய தாராண்மைக் கொள்கையும் ஏகாதிபத்தியக் கொள்கையும், சமவுடைமையும் ரஷ்யப் புரட்சியும், பாசிசக் கொள்கை, உலக ஒழுங்கு அல்லது அழிவு, முடிபுகள் ஆகிய பதினொரு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 40797).