15169 அரசியல் விஞ்ஞானம்: அறிமுகமும் அணுகுமுறைகளும்.

ஆதம்வாவா சர்ஜீன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

x, 142 பக்கம், விலை: ரூபா 390., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-659-5.

அரசியல் மற்றும் அரசியல் விஞ்ஞானம் தொடர்பான அடிப்படைப் புரிந்துணர்வினை மிகச் சுருக்கமாகவும் தெளிவாகவும் வழங்கும் இந்நூல் இரண்டு பகுதிகளைக் கொண்டமைகின்றது. முதலாவது பகுதியில், அரசியல் என்பது பொதுவான வழக்கில் கொண்டுள்ள பொருள் விளக்கமும் அதனைத் தொடர்ந்து முறையானதொரு கற்கை நெறியாக அரசியல் விஞ்ஞானத்தை விளங்கிக்கொள்வதற்கான முயற்சியும் இடம்பெற்றுள்ளது. அரசியல் விஞ்ஞானத்தின் உள்ளடக்கம், அரசியல் விஞ்ஞானம் ஏனைய சமூக விஞ்ஞானங்களிலிருந்து வேறுபடும் விதம், அரசியல் விஞ்ஞானத்தைக் கற்பதன் பயன்பாடு குறித்தும் இந்நூல் தெளிவாக எடுத்தியம்புகின்றது. இந்த நூலின் பகுதி இரண்டில், அரசியல் விஞ்ஞானக் கற்கைக்கான பழைய அணுகுமுறைகள் மற்றும் புதிய அணுகுமுறைகள் மிக விரிவாகவும் தெளிவாகவும் விளக்கப்பட்டுள்ளன. இந்நூல் அரசியல் விஞ்ஞானத்தை தமிழ் மொழிமூலமாகக் கற்கும் உயர்தர மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பெரும் பயனுடையதாக அமையும். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகக் கடமையாற்றும் கலாநிதி ஆதம்பாவா சர்ஜ{ன் நிந்தவூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

ஏனைய பதிவுகள்

Earn Earn Slot machine

Blogs Nz pokies | Ainsworth Video slot Reviews No Free Game What is the Amount of Signs One Trigger The new Dual Winnings Incentive? Greatest