கலாநிதி ச.பாஸ்கரன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
(10), 253 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 550., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-658-8.
அரசியற் கோட்பாடுகள்: ஓர் அறிமுகம், புராதன ஆசியாவின் அரசியல் கோட்பாடுகள், புராதன இந்துமத அரசியல் கருத்துக்கள்: கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம், புராதன பௌத்த மத அரசியல் கருத்துக்கள், புராதன சீன அரசியல் கருத்துக்கள்: கன்பூசியஸ், கிரேக்கர் கால அரசியல் கோட்பாடு, பிளேட்டோவின் அரசியல் கருத்துக்கள், அரிஸ்டோடிலின் அரசியல் கருத்துக்கள், நவீன அரசியற் கோட்பாடு: மாக்கியவெல்லி, சமூக ஒப்பந்தக் கோட்பாடு, தோமஸ் ஹொப்சின் அரசியல் கருத்துக்கள், ஜோன் லொக்கின் அரசியல் கருத்துக்கள், ரூசோவின் அரசியல் கருத்துக்கள், மார்க்சியக் கோட்பாடு: கார்ல் மார்க்ஸ் ஆகிய 14 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அரசறிவியற் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார்.