பீ.எம்.புன்னியாமீன். கொழும்பு 13: E.P.I. புத்தகாலயம், 64, 2/2, ஹின்னிஅப்புஹாமி மாவத்தை, கொட்டஹேன, 2வது பதிப்பு, ஜீன் 1994, 1வது பதிப்பு, ஜீலை 1993. (கொழும்பு 03: PACK கிராப்பிக்ஸ், 408, காலி வீதி).
(2), 59 பக்கம், விலை: ரூபா 60.00, அளவு: 21.5×14 சமீ.
G.C.E(A/L) பரீட்சை, பல்கலைக்கழக முதற் கலை வெளிவாரித் தேர்வுப் பரீட்சை G.A.Q, பல்கலைக்கழகப் பரீட்சைகள், சட்டக் கல்லூரி முதலாம் வருடப் பரீட்சை, B.A.பரீட்சை மற்றும் போட்டிப் பரீட்சைகள் எழுதும் மாணவர்களுக்குப் பொருத்தமான நூல். மாதிரி வினாக்களை இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கைகள், அணிசேரா இயக்கம், சார்க், ஐக்கிய நாடுகள் தாபனம், இலங்கையின் உள்ளூராட்சி முறைகள் (பிரதேச சபைகள், நகர சபைகள், மாநகர சபைகள்), மாகாண சபைகள், கட்சி முறைகள், பிரதேச செயலகம், 15000 அபிவிருத்தித் திட்டங்கள், தென் மாகாண சபைத் தேர்தல், இலங்கை இந்திய உறவுநிலை ஆகிய பாட அலகுகளுக்கேற்றவாறு நூலாசிரியர் தேர்ந்து வழங்கியுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28270).