15175 2009 இற்குப் பின்னரான தமிழ் ராஜதந்திரம்.

நிலாந்தன். யாழ்ப்பாணம்: அரசியல் சிந்தனை நூல் வரிசை, சமூக விஞ்ஞான ஆய்வு மையம், 28, செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2019. (அச்சக விபரம் தரப்படவில்லை).

20 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14  சமீ.

யாழ்ப்பாணம், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் அரசியல் சிந்தனை நூல் வரிசையில் 14ஆவது நூலாக வெளிவந்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 14.12.2018 இல் நடந்த சமகாலக் கருத்தரங்கில் ஆற்றிய உரையின் திருத்தப்பட்ட வடிவம் இது. எமது நீண்ட விடுதலைப் போராட்டத்தில் இராஜதந்திரச் செயற்பாடு நிறுவனமாக்கப்படவில்லை. எமக்கென ஒரு வெளிநாட்டுக் கொள்கை உருவாக்கப்பட்டிருக்கவில்லை. அரசுகளுக்குத்தான் வெளிநாட்டுக் கொள்கை இருக்கவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. அரசற்ற தேசங்களுக்கும் வெளிநாட்டுக் கொள்கை தேவையானது. இலங்கைத் தீவில் அனைத்து அரசியல் நிகழ்வுகளுக்கும் புவிசார் அரசியல் காரணமாக இருக்கின்றது. இதைப் பற்றிய தெளிவைப் பெற்றுக்கொள்வதற்கும் நிறுவன ரீதியான ராஜதந்திரச் செயற்பாடு அவசியம். நிலாந்தனின் இச்சிறுநூல் தமிழர்களுக்கான ராஜதந்திரம் பற்றிய புரிதலைத் தருகின்றது.

ஏனைய பதிவுகள்

Irish Luck On-line casino Comment

Blogs Finest Irish Web based casinos 2024 Time limit dos No-deposit Bonus Since the 20 100 percent free Revolves Tips Verify that An online Casino