15178 இளைய தலைமுறைகளுக்கு ஞாபகங்களை கடத்துங்கள்.

நிலாந்தன். யாழ்ப்பாணம்: அரசியல் சிந்தனை நூல் வரிசை, சமூக விஞ்ஞான ஆய்வு மையம், 28, செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2019. (அச்சக விபரம் தரப்படவில்லை).

20 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×15 சமீ.

யாழ்ப்பாணம், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் அரசியல் சிந்தனை நூல் வரிசையில் 17ஆவது நூலாக வெளிவந்துள்ளது. கனடாவைத் தளமாகக் கொண்டியங்கும் ஈ-குருவி ஊடகம் 12.05.2019 இல் ஒழுங்குசெய்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் ஆற்றிய உரையின் நூல்வடிவம் இது. முள்ளிவாய்க்காலில் மக்கள் பட்ட அவலங்கள் தமிழ் மரபில் நிறுவன உருவாக்கிகள், புதிய நிறுவன உருவாக்கிகளின் அவசியம், தாயகத்தில் புலம்பெயர் நிறுவன உருவாக்கிகளின் பாத்திரம் என்பவை பற்றி இந்நூல் விரிவாகக் கூறுகின்றது. புலம்பெயர்ந்த ஈழத்துத் தமிழ் மக்களின் புதிய தலைமுறையினரை தாயகத்தில் அறிமுகப்படுத்தவேண்டியது இன்று அவசியமானது என்பதை யூதத் தேசியத்தினதும், சீன தேசியத்தினதும் பின்புலத்தில் இந்நூல் வலியுறுத்துகின்றது.

ஏனைய பதிவுகள்

11463 கணக்குப் பதிவியல்.

சி.ந.தேவராசன். கொழும்பு: இலங்கை அரசகரும மொழித் திணைக்களம், 1வது பதிப்பு, 1956. (கொழும்பு: அரசாங்க அச்சகம்). xii, 522 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×13.5 சமீ. ஆரம்ப உரை, காசுக் கணக்கு,