15180 இனப்பிரச்சினைத் தீர்வில் சர்வதேச அனுபவங்கள்.

சி.அ.யோதிலிங்கம். யாழ்ப்பாணம்: அரசியல் சிந்தனை நூல் வரிசை, சமூக விஞ்ஞான ஆய்வு மையம், 28, செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2018. (அச்சக விபரம் தரப்படவில்லை).

24 பக்கம், விலை: ரூபா 30.00, அளவு: 21×15.5 சமீ.

2010ஆம் ஆண்டு ஆடி மாதம் 31ஆம் திகதி கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற பாவலர் துரையப்பாபிள்ளையின் 81ஆவது சிரார்த்த தினத்தில் ஆற்றிய நினைவுப் பேருரையின் செம்மைப்படுத்தப்பட்ட பிரதி. தமிழ் மக்கள் 1977ம் ஆண்டு தேர்தல் மூலம் தமிழீழத்திற்கான அங்கீகாரத்தை வழங்கி அதற்கான ஆயுதப் போராட்டம் 30 வருடங்களாக இடம்பெற்று 2009 வைகாசி மாதத்தில் முள்ளிவாய்க்கால் படுகொலையோடு முடிவிற்கு வந்தது. இலங்கைத் தீவினை மையமாகக் கொண்ட புவிசார் அரசியல் நலன்கள் காரணமாக இலங்கையுடன் தொடர்புபட்ட வல்லரசுகள் தமிழீழக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில் இலங்கை என்ற அரச அதிகாரக் கட்டமைப்புக்குள் தீர்வுகளை எட்டவேண்டிய நிலை தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழ் மக்களின் கூட்டிருப்பையும், கூட்டுரிமையையும் கூட்டடையாளத்தையும் பாதிக்காத நிலைமையிலும், தேசம், இறைமை, சுயநிர்ணயம் என்பதை ஏற்றுக்கொண்ட நிலையிலும் அரசியல் தீர்வினைத் தேட வேண்டியது இன்றைய நிலையில் அவசியமாகின்றது. இதற்கு இச்சிறுநூல் உதவியாக இருக்கும். யாழ்ப்பாணம், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் அரசியல் சிந்தனை நூல் வரிசையில் 8ஆவது பிரசுரமாக இந்நூல் வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

14085 சைவ போதினி மத்திய பிரிவு (எட்டாம் வகுப்புக்குரியது).

நூலாக்கக்குழு. கொழும்பு13: விவேகானந்த சபை, 34, விவேகானந்த மேடு, 3வது பதிப்பு, மார்ச் 1964. (கொழும்பு: மெய்கண்டான் அச்சகம், 161, செட்டியார் தெரு). (4), 186 பக்கம், விளக்கச் சித்திரங்கள், விலை: ரூபா 2.00,