15181 ஈழத்தமிழர் அரசியல் வரலாறு: 1883 தெடக்கம் 1968 வரை: சுருக்கக் குறிப்புகள் (பாகம் 1).

சி.அ.யோதிலிங்கம். யாழ்ப்பாணம்: அரசியல் சிந்தனை நூல் வரிசை, சமூக விஞ்ஞான ஆய்வு மையம், 28, செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2018. (அச்சக விபரம் தரப்படவில்லை).

75 பக்கம், விலை: ரூபா 100.00, அளவு: 21.5×16 சமீ.

இலங்கையில் நவீன அரசியல் ஆரம்பிக்கப்பட்ட 1883ஆம் ஆண்டிலிருந்து 1968 வரையான காலப்பகுதிக்குரிய  தமிழர் அரசியல் வரலாறு சுருக்கக் குறிப்புகளாக இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்களுக்கும், வரலாற்றுத்துறை மாணவர்களுக்கும் இதுவொரு உசாத்துணை நூலாக அமைகின்றது. யாழ்ப்பாணம், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் அரசியல் சிந்தனை நூல் வரிசையில் 09ஆவது நூலாக வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 64411).

ஏனைய பதிவுகள்

Fixed Restriction Texas holdem

Content Use this weblink | Step And you can Playing If you Have fun with the Vacation Choice Within the Greatest Texas hold’em? Casino poker