சி.அ.யோதிலிங்கம். யாழ்ப்பாணம்: அரசியல் சிந்தனை நூல் வரிசை, சமூக விஞ்ஞான ஆய்வு மையம், 28, செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2019. (அச்சக விபரம் தரப்படவில்லை).
22 பக்கம், விலை: ரூபா 30.00, அளவு: 20.5×15 சமீ.
யாழ்ப்பாணம், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் அரசியல் சிந்தனை நூல் வரிசையில் 21ஆவது நூலாக வெளிவந்துள்ளது. கடந்த பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் கிழக்கு- தமிழ்த் தேசிய அரசியலிலிருந்து விலகிச் செல்கிறதா என்ற கேள்வியையும் எழுப்பி, அது பற்றிய ஒரு விவாதத்தையும் தொடக்கிவைத்திருக்கிறது. இவ்விவாதம் மேலும் மேலும் வளர்ச்சியடைவதற்கும் தமிழ்த் தேசிய அரசியலை மீளுருவாக்கம் செய்வதற்கும் இச்சிறு நூல் உதவுகின்றது. தமிழரை ஒரு சிதைந்த இனக்குழுவாக மாற்றுவதற்கு பெருந்தேசியவாதம் நீண்ட காலமாகவே திட்டமிட்டிருந்தது. அந்தத் திட்டமிடல் குறிப்பிடத்தக்க கட்டத்திற்கு வந்துள்ளதா? என்ற சந்தேகத்தை இன்னைய யதார்த்த நிலை எழுப்பியுள்ளது. இது பற்றிய உரையாடலை இந்நூல் தொடக்கிவைத்துள்ளது.