15184 தமிழ் அரசியலின் இலக்கும் வழிவரைபடமும்.

சி.அ.யோதிலிங்கம். யாழ்ப்பாணம்: அரசியல் சிந்தனை நூல் வரிசை, சமூக விஞ்ஞான ஆய்வு மையம், 28, செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2018. (அச்சக விபரம் தரப்படவில்லை).

8 பக்கம், விலை: ரூபா 20.00, அளவு: 21×15.5 சமீ.

மைத்திரிபால-ரணில் இணைப்பில் உருவான நல்லாட்சி அரசானது  இனப் பிரச்சினைக்கு தீர்வு என்ற பெயரில் சமஷ்டியும் இல்லாத, வடக்கு-கிழக்கு இணைப்பும் இல்லாத மாகாண சபைகளுக்கு அதிகாரம் தருவது போல ஒரு தோற்றம் தெரிகின்ற தீர்வினை முன்வைக்க இருக்கின்றது. மக்கள் அங்கீகாரம் பெற்றதாகக் கூறிக்கொள்ளும் தமிழ் அரசியல் தலைமையும் மக்கள் ஆணைக்கு முரணாக மேற்குறிப்பிட்ட யோசனைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு உண்மையில் எவ்வாறு அமைய வேண்டும்? அதனை அடைவதற்கான வழிவரைபடம் என்ன என்பது பற்றிய ஆரோக்கியமான உரையாடல் அவசியமாகின்றது. இந்நூல் அவ்வுரையாடலை தொடக்கிவைக்கின்றது. யாழ்ப்பாணம், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் அரசியல் சிந்தனை நூல் வரிசையில் 4ஆவது நூலாக இந்நூல் வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Neue Online Casinos Juni 2024

Content Warum Ist Die Auszahlungsquote Im Online Casino Wichtig? – online casino echtgeld ohne einzahlung Bei Welchem Online Wettanbieter Kann Man Ohne Oasis Spielen? Wie