15186 நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பான கலந்தாலோசனைச் செயலணியின் அறிக்கையும் தமிழ் மக்களும்.

சி.அ.யோதிலிங்கம். யாழ்ப்பாணம்: அரசியல் சிந்தனை நூல் வரிசை, சமூக விஞ்ஞான ஆய்வு மையம், 28, செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2018. (அச்சக விபரம் தரப்படவில்லை).

12 பக்கம், விலை: ரூபா 20.00, அளவு: 21×15.5 சமீ.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சரத் முததெட்டுவேகமவின் துணைவியார் மனோரி முத்தெட்டுவேகமவின் தலைமையில் 26.01.2016 அன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பான கலந்தாலோசனைச் செயலணி அமைக்கப்பட்டது. இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பான, நல்லிணக்கப் பொறிமுறைகள் கலந்தாலோசனைச் செயலணி தனது அறிக்கையை கடந்த மாசிமாதம் 3ஆம்திகதி சமர்ப்பித்திருந்தது. ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதியோ, பிரதமரோ பங்குகொள்ளவில்லை. தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவியும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா குமாரணதுங்கவிடமே அறிக்கை கையளிக்கப்பட்டது. இவ்வறிக்கை தொடர்பான பார்வையினை மக்களுக்கு வழங்கும் வகையில் இச்சிறுநூல் வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் அரசியல் சிந்தனை நூல் வரிசையில் 01ஆவது நூலாக வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 64410).

ஏனைய பதிவுகள்

Avis sur les casinos en ligne

3 mines game Mines game download real money Avis sur les casinos en ligne This string is then converted into a SHA512 hash, an advanced