15189 போருக்குப் பிந்திய அரசும் சமூகமும்: இலங்கையின் அனுபவங்கள்.

 எம்.எம்.பாஸில் (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 2வது பதிப்பு, 2020, 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xxv, 546 பக்கம், விலை: ரூபா 1200., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-736-3.

பின்-யுத்தகாலப் பிரச்சினைகள் பலவும் இந்நூலிலுள்ள ஆக்கங்களில் இடம்பெற்றுள்ளன. இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் மிக முக்கிய பாத்திரமான “இனம்” பற்றிய உரையாடல்கள் பலவிதங்களில் இந்நூலில் நோக்கப்படுகின்றன. சமாதானத்தினை கட்டியெழுப்புதல்: எண்ணக்கரு, வழிமுறைகள், நிலை மாற்றங்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் (எம்.ஏ.எம்.பௌசர்)/ யுத்தத்திற்குப் பிந்திய இலங்கையில் அரசியல் நிலைமாற்றம்: சில முக்கிய செல்நெறிகள் (எம்.ஏ.எம்.பௌசர்)/இலங்கையில் இன நல்லுறவுகளும் பிணக்குகளும்: போருக்குப் பிந்திய அனுபவங்கள் (ஏ.றமீஸ்)ஃ யுத்தத்திற்குப் பிந்திய இலங்கையின் மீள்குடியேற்றச் செயன்முறை: திருக்கோணமலை மாவட்டத்தின் சம்பூர் பிரதேசம் குறித்த விடய ஆய்வு (ஜே.ஜனார்த்தனி, எம்.எம்.பாஸில்)/ உள்நாட்டு யுத்தத்திற்குப் பின்னர் இலங்கையின் நிலைமாறு கால நீதியும் உண்மையைக் கண்டறிதலும்: சர்வதேச அனுபவங்களுடனான ஒரு விமர்சனப் பார்வை (ஏ.யோகராஜா)/ யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் இலங்கையின் பேரினப் பொருளாதார மாறிகளில் ஏற்பட்ட மாற்றங்கள் (எஸ்.எம்.அஹமட் லெப்பை)/ யுத்தத்திற்குப் பின்னரான அபிவிருத்தியும் அதன் சூழல் விளைவுகளும் (எம்.ரீ.எம்.மஹீஸ்)/ யுத்தத்திற்குப் பிந்திய இலங்கையில் மீள் ஒருங்கிணைத்தல் செயன்முறை: ஒரு விமர்சன நோக்கு (எம்.எம்.பாஸில்)/ யுத்தத்திற்குப் பிந்திய இலங்கையின் மேற்கு ஐரோப்பிய நாடுகளுடனான வெளிநாட்டு உறவுகள் (எம்.பி.சப்னா சக்கி, எம்.எம்.பாஸில்)ஃ சிவில் யுத்தத்திற்குப் பிந்திய இலங்கை சமூகத்தில் பன்மைத்துவம் (ரீ.பாத்திமா ஸஜீதா, எம்.எம்.பாஸில்)ஃ வடக்கு-கிழக்கு மாகாணங்களின் பிரிப்பும் முஸ்லிம் ஆள்புல அரசியலும்: யுத்தத்திற்குப் பிந்திய கிழக்கின் அரசியல் சூழ்நிலை குறித்த பகுப்பாய்வு (ஏ.சர்ஜீன்)/ யுத்தத்திற்குப் பிந்திய இலங்கையில் இன நல்லிணக்கச் சவால்கள்: கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்ட நோக்கு (எஸ்.பாஸ்கரன்)/ யுத்தத்திற்குப் பின்னரான இலங்கையில் அபிவிருத்தியும் நிலைமாறுகால நீதியும் (என்.புஸ்பராசா)ஃ இலங்கையில் இறுதி யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரும் அது தொடர்பான அரசின் பொறுப்புக் கூறலும்: வவுனியா பிரதேச செயலகத்தை மையப்படுத்திய ஆய்வு (டி.அல் ஹ{து, வி.கமலசிறி)ஃ யுத்தத்திற்குப் பிந்திய இலங்கையில் சிறுபான்மையினரை அரச முறைமைக்குள் உள்ளீர்த்தல் (எம்.எம்.பாஸில், வீ.அமீர்தீன்)ஃ ஈழத்தில் யுத்தத்திற்குப் பிந்திய இலக்கியம்: சில எடுத்துக்காட்டுக்களை அடிப்படையாகக் கொண்ட விபரண நோக்கு (எம்.ஏ.எம்.றமீஸ், எம்.ஏ.எம்.பௌசர்) ஆகிய 16 ஆய்வுக் கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்