15190 மலையக அரசியல் வரலாற்று வளர்ச்சியும் முன்நகர்த்த வேண்டிய பணிகளும்.

சி.அ.யோதிலிங்கம். யாழ்ப்பாணம்: அரசியல் சிந்தனை நூல் வரிசை, சமூக விஞ்ஞான ஆய்வு மையம், 28, செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2019. (அச்சக விபரம் தரப்படவில்லை).

22 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×15 சமீ.

யாழ்ப்பாணம், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் அரசியல் சிந்தனை நூல் வரிசையில் 18ஆவது நூலாக வெளிவந்துள்ளது. மலையகம் பற்றி சமூக விஞ்ஞான ஆய்வு மையம் வெளியிடும் மூன்றாவது நூல் இதுவாகும். முன்னதாக இத்தொடரின் 5ஆவது நூலாக “மோடியின் இலங்கைப் பயணமும் மலையகமும்” என்ற நூலும், 12ஆவது நூலாக ‘மலையக மக்களின் அடையாளம் எது?” என இரு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நூல் மலையக அரசியலின் இலக்கு பற்றியும் அதனை அடைவதற்கான வழிவரைபடம் பற்றியும் குறிப்பிடுகின்றது.

ஏனைய பதிவுகள்

12901 – என் குருநாதன்.

அடியார்க்கடியன் (இயற்பெயர்: தவத்திரு சிவகுருநாதன் அடிகளார்). கொழும்பு 2: தத்துவஞானத் தவச்சாலைப் பிரசுரம், 31ஃ21, டோசன் வீதி, 1வது பதிப்பு, மே 2001. (கொழும்பு 13: லக்ஷ்மி அச்சகம், 195, ஆட்டுப்பட்டித் தெரு). xii,

14965 பிரித்தானியாவின் புதிய அடிப்படை வரலாறு: நான்காம் பகுதி 1688-1939.

சோச்சு தவுண்சென் உவாணர், சி.என்றி கே. மாட்டின், டி.எசுகின் மூர் (ஆங்கில மூலம்). இந்திரா மகாதேவா, கா.பத்மநாதன் (தமிழாக்கம்). கொழும்பு 7: வெளியீட்டுப் பிரிவு, அரச கரும மொழித் திணைக்களம், 1வது பதிப்பு, 1960.