15191 மலையக மக்களின் அடையாளம் எது?

சி.அ.யோதிலிங்கம். யாழ்ப்பாணம்: அரசியல் சிந்தனை நூல் வரிசை, சமூக விஞ்ஞான ஆய்வு மையம், 28, செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2018. (அச்சக விபரம் தரப்படவில்லை).

12 பக்கம், விலை: ரூபா 20.00, அளவு: 21.5×16 சமீ.

மலையக மக்கள் பற்றிய புரிதலை பல்பரிமாண நோக்கில் பெற்றுக்கொள்வதற்கு  இந்நூல் மிகவும் உதவியாக இருக்கும். மலையக மக்களின் அடையாளம் எது என்பது தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் மலையக மக்கள் இலங்கையில் நிலைபெற்று வாழத் தொடங்கிய காலம் தொட்டே இருந்து வருகின்றது. ஒரு சாரார் ‘இந்திய வம்சாவழித் தமிழர்” என்ற அடையாளத்தைப் பேணவேண்டும் என்கின்றனர்.  இன்னெரு சாரார் ‘மலையகத் தமிழர்” என்ற அடையாளத்தைப் பேணவேண்டும் என்கின்றனர். இந்த வாதப் பிரதிவாதங்கள் இன்னமும் முடிவிற்கு வரவில்லை. இந்நூலாசிரியர் ‘மலையகத் தமிழர்” என்ற அடையாளத்தையே வலியுறுத்தி தன் வாதங்களை முன்வைக்கின்றார். மலையக அரசியல் கட்சி அரசியலுக்குள்ளும் தொழிற்சங்க அரசியலுக்குள்ளும் சிக்கித் தவிக்கிறது. இதனை தேசிய இன அரசியல் என்ற தளத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இதற்கு தேசிய இன நிலை நின்று மலையக மக்களின் விவகாரங்களைப் பார்க்கும் தளம் உருவாகவேண்டும் அதற்கான ஆய்வுகள், கலந்துரையாடல்கள் என்பன இடம்பெறவேண்டும் என்கிறார். யாழ்ப்பாணம், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் அரசியல் சிந்தனை நூல் வரிசையில் 12ஆவது நூலாக இந்நூல் வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் Pam5872).

ஏனைய பதிவுகள்

Age ori Troy: Dans grati fie care bani

Content Licențierea și Reglementarea Cazinourilor Online deasupra România Varietatea Opțiunilor ş Vărsare Jocuri ş Cazinou de Dealeri Reali – Experimentează Atmosfera Autentică să Cazinou între