15193 மோதல் தீர்வுக் கற்கைகள்: ஓர் அறிமுகம்.

தனபாலசிங்கம் கிருஷ்ணமோகன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xii, 272 பக்கம், விலை: ரூபா 650., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-710-3.

மோதல் தீர்வுக் கற்கைகள் (Conflict Resolution Studies) நெறியானது மனித மோதலின் தன்மை மற்றும் இயக்கவியல் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளுதல், ஆரோக்கியமான உறவுகளை வளர்த்தல், வன்முறையைத் தடுக்கும் வழிகள் மற்றும் மோதலைக் கையாள்வதற்குப் பொருத்தமான மாற்று வழிகளைத் தேடுதல் என்பனவற்றில் கவனம் செலுத்துகின்றது. மோதல், தகராறு, வன்முறை, யுத்தம், அதிகாரம், கலாசாரம், நீதி, சமாதானம், தகவல் தொடர்பு, முகாமைத்துவம், மோதலைத் தீர்த்தல், மோதல் நிலைமாற்றம் போன்ற தலைப்புகளுடன் தொடர்புபடும் வகையில் மோதல் தீர்வுக் கற்கைகள் நெறி பகுப்பாய்வு செய்யப்படுகின்றது. மேலும் தனிப்பட்ட, தேசிய, சர்வதேச மோதல் சூழ்நிலைகளுக்குப் பதிலளிக்கவும், மோதலை ஆக்கபூர்வமாகப் புரிந்துகொள்ளவும், தொடர்பு கொள்ளவும் மோதல் தீர்வுக் கற்கைகள் நெறி மாணவர்களைத் தயார்படுத்துகின்றது. இவ்வகையில் இந்நூல் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அரசறிவியலை உயர்தரத்தில் கற்கும் மாணவர்களுக்கும், பொது வாசகர்களுக்கும் பயன்தரும் வகையில் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் அரசறிவியல் துறையில் யாழ்.பல்கலைக்கழகத்தில் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தையும் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் முதுதத்துவமாணிப் பட்டத்தையும் யாழ். பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றவர். யாழ்.பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக 1989-1993 காலகட்டத்தில் பணியாற்றிய இவர், தற்போது கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானங்கள் துறையில் அரசறிவியல்துறைப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

ஏனைய பதிவுகள்

Play Slots On the web For real Money

Content Competitor Gambling – Jurassic Park slot Go for Reduced Jackpots Greatest Slots To play Online For real Currency Totally free Spins Incentives As much