15196 இலங்கையின் சட்டமும் மனித உரிமைகளும்.

சாருக்க சமரசேகர (தொகுப்பாசிரியர்). கொழும்பு 3: நீதியைச் சமமாக அணுகுமுறைக்கான கருத்திட்டம், 4 ஆவது மாடி, இல. 310, காலி வீதி, 1வது பதிப்பு, ஜீலை 2005. (அச்சக விபரம் தரப்படவில்லை).

viii, 24 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ., ISBN: 955-1258-01-0.

நீதியைச் சமமாக அணுகும் கருத்திட்டத்திற்காக தொகுக்கப்பட்ட கைந்நூல் இது. சாருக்க சமரசேகர மேற்படி கருத்திட்டத்தின் செயல்திட்ட அதிகாரியாவார். “நீதியைச் சமமாக அணுகுமுறைக்கான கருத்திட்டம்” என்பது ஐக்கிய நாட்டு அபிவிருத்தி நிகழ்ச்சியாளரும் அரசியல் யாப்பு தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சும் இணைந்து செயற்படுத்தும் ஒரு நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சித் திட்டம், மனித உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறையின் ஊடாக பொது மக்களின் மனித உரிமைகள் சார்ந்த அறிவு வளர்ச்சியை  முன்னேற்றச் செய்வதனையே நோக்காகக் கொண்டது. அதனை அடைவதற்காக மேற்கொள்ளப்படும் பல்வேறு செயல்திட்டங்களுள் ஒன்றாக இந்நூல் வெளியீடு அமைகின்றது. தனது உரிமையைப் போலவே தனத கடமைகளை நன்குணர்ந்த பொறுப்பணர்ச்சியுள்ள பிரஜைகளை உருவாக்கவதே இந்நூலை வெளியிடுவதன் நோக்கமாகும்.

இலங்கையின் சட்டம் மற்றும் மனித உரிமைகள். சாருக்க சமரசேகர (தொகுப்பாசிரியர்).

கொழும்பு 3: நீதி நியாயத்தைச் சமமாக அணுகும் கருத்திட்டம், 4 ஆவது மாடி, இல. 310, காலி வீதி, 2வது பதிப்பு, 2008, 1வது பதிப்பு, ஜீலை 2005. (மஹரகம: தரஞ்ஜீ பிரின்டர்ஸ், 506, ஹைலெவல் வீதி, நாவின்ன).

x, 66 பக்கம், ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 955-1258-01-0.

இரண்டு பகுதிகளைக் கொண்ட இந்நூலின் முதலாவது பகுதியில் இலங்கையில் சட்டம் பற்றிய ஓர் அறிமுகம், சட்டம் என்பது என்ன?, வரலாற்று அறிவித்தல், இலங்கையின் சட்ட வரலாறு, தற்போதைய இலங்கையின் சட்டவமைப்புகள், குற்றவியல் சட்டம், குடியியல் சட்டம், இலங்கையின் தேசியச் சட்டம், இலங்கையில் நீதிமன்ற அமைப்பு, இலங்கையில் மேன்முறையீடு செய்வதற்கான நடவடிக்கை முறைகள், அரசியலமைப்பின் பிரகாரம் பிரசைகளின் கடமைகள் ஆகிய விடயங்கள் விளக்கப்பட்டுள்ளன. இரண்டாம் பகுதியில் மனித உரிமைகள் பற்றிய அறிமுகம், மனித உரிமைகள் என்றால் என்ன, வரலாறு சார்ந்த அறிவித்தல், மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள், இலங்கையின் அரசியலமைப்பின் கீழ் அடிப்படை உரிமைகள், அடிப்படை உரிமைகள் வழக்கொன்றைத் தாக்கல் செய்தல், அடிப்படை உரிமைகள் தொடர்பான முக்கிய விடயங்கள், அடிப்படை உரிமைகளை மீறுதல் பற்றி முறைப்பாடு செய்யக்கூடிய வேறு நிறுவனங்கள் ஆகிய விடயங்கள் விளக்கப்பட்டுள்ளன. இறுதியில் மனித உரிமைகள் பற்றிய உலகப் பிரகடனம், தொன் ரஞ்ஜித் தேசப்பிரிய எதிர் உருக்குமணி பிரதேசச் செயலாளர் தொடங்கொட மற்றும் வேறு ஒரு நபர்- வழக்குத் தீர்ப்பு, நீதி நியாயத்தைச் சமமாக அணுகும் கருத்திட்டம் ஆகிய மூன்று பின்னிணைப்புகள் காணப்படுகின்றன.

ஏனைய பதிவுகள்